என் இதயம் வலிக்குதடா தங்கமே 555
***என் இதயம் வலிக்குதடா தங்கமே 555 ***
என் அன்பு மகனே...
இத்தனை நாள் நான்
கற்பனையில் வாழ்ந்து வந்தேன்...
குயிலின் ஓசையும் யாழியின்
இசையும் தான் இனிமை என்று...
உன் மழலை பேச்சை
கேட்டபிறகே நானும் உணர்ந்தேன்...
ஓசையும் இசையும்
உன் மழலை மொழியில்தான் என்று...
உன்னை செல்லமாக
தொட்டு தூக்கி...
என் நெஞ்சோடு அணைக்கும்
போது கிடைக்கும் சுகமும்...
உன் மழலை மொழியை
கேட்க்கும் போது...
செவிக்கு
கிடைக்கும் சுகத்தையும்...
நான் வார்த்தைகளில்
எப்படி சொல்வேன்...
உன் தேவைகளை மழலை
மொழியில் தெளிவாக சொல்கிறாய்...
நான் பாதி
புரிந்தும் புரியாமலும்...
இருந்தும் நான் உன் தேவைகளை
பூர்த்தி செய்கிறேன் என் செல்லமே...
நீ உன் கைகளால்
பிசைந்து கொடுக்கும்...
உணவுக்கு
ஈடாகுமா தேவாமிர்தம்...
நீ தினம் கைபேசியில்
முத்தம் கொடுக்கும் போதும்...
அப்பா என்று அழைக்கும்
போதும் அத்தனை இன்பமடா...
நேரில் நான்
இல்லாதத்தை கண்டு...
அப்பா காணும் என்று
சொல்லும் போதெல்லாம்...
என் இதயம்
வலிக்குதடா தங்கமே...
சீக்கிரம் வருகிறேன்
அரபு மண்ணில் இருந்து...
உன் பிறந்தநாளில் கூட உன்
அருகில் இருக்க முடியாத...
உன் தந்தை என்னை
மன்னித்துவிடு தங்கமே...
எப்போதும் நீ
சிரித்துக்கொண்டு இருக்க...
உன் தந்தை உனக்காக
உழைத்து கொண்டு இருப்பேன் என்றும்.....
***இனிய உதயநாள் நல்வாழ்த்துக்கள் செல்லமே***04 :07 :2021 ***
***முதல் பூ பெ.மணி.....***