ருசி
மனதுக்கு உயிருண்டு,
வழி வலி அறிய.
வலி தீர ,வழி உண்டு
உயிர் மனது உணர...,
பழக்கம் முழுதும் பழகிக்கொண்டு அனிச்சையாய் வாழ,
தன்னிச்சையாய் செல்ல..,
பதிந்துவிட்ட இச்சை யாவும்
ருசியைத் தேடி அலையும்
அலையும் மனதைக் கொல்ல
ஆயுதத்தை ஏந்தும்.
பதிந்துவிட்ட ருசியாவும்,
நாச்சுவைக்கு மாறும்,
மனதில் நிழலாடும்.
ருசி கசப்பாகலாம்?
கசப்பு ருசி ஆகலாம்?
பசி..முந்தி செல்ல!