தமிழ் மொழி
தமிழ்மொழி
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவான் முதற்றே உலகு
திருவள்ளுவர்
பல மொழிகள் இவ்வுலகில் இருந்தாலும் பேசினாலும் அனைத்து மொழிக்கும் அன்னையாக இருக்கும் மொழி நாம் தமிழ் மொழி.
தமிழின் சிறப்பை சொல்வதை விட அதை படித்து சுவைப்பாது இனிது.
நாம் தமிழன் என்பதும் நாம் மொழி தமிழ் மொழி என்பது தனி அழகை தருகிறத்து.
பல மொழிகள் வந்து ஆட்சி செய்தாலும் என்று தனி சிறப்புடன் வலம் வருவது தமிழ்மொழி.
முதலில் தோன்றிய மொழி தமிழ் மொழி ஒன்பது கோடி தமிழர்களின் தனித்துவமான மொழி தமிழ் மொழி. இன்று நாம் வலைதளத்தில் அதிகம் பயன்படுத்தும் மொழி தமிழ் மொழி.
"கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றியா முத்த மொழி தமிழ் மொழி "
தமிழ் தோன்றிய இடம் குமரிகண்டம்,குமரிமாந்தனின் இலமுரியாக் கண்டம்.
தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறட்பிடமும் குமரிக்கண்டம் தான்.
இப்போது இக் கண்டம் இல்லை
நீரில் முழ்கியத்து.
இக் கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது
ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு
என பிரித்திருந்தனர்
அந்நாட்டில் வாழ்ந்தவர் தான் தமிழன் இவனுடைய மொழிதமிழ்
திராவிட மொழிகள் பல உள்ளன. அவைகள் அனைத்தும் தமிழ் என்ற ஒரு முல மொழியிலிருந்து உருவானவைகள் திராவிட மொழிகளின் குடும்பம்.
அதில் முலமொழியாக தமிழ்மொழி இருக்கிறத்து.
பண்டைய மன்னர்கள் பலர் தமிழ் மொழி வளர்ச்சி அடையா செய்தனர்.
தஞ்சை பெரிய கோவில்
இக்கோவிலில் தமிழின் சிறப்புக்களும் மாமன்னர் இராஜ ராஜ சோழனின் தமிழ் பற்றும் கோயிலில் உள்ள சிவ லிங்கத்தின் உயரம் 12 அடி தமிழின் உயிர் எழுத்துக்கள் 12, சிவ லிங்கத்தின் பீடத்தின் உயரம் 18 அடி தமிழின் மெய் எழுத்துக்கள் 18, கோயிலின் கோபுரத்தின் உயரம் 216 அடி தமிழின் உயிர் மெய் எழுத்துக்கள் 216, சிவ லிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி தமிழின் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247 ஆகும்
தமிழ் மொழி நூல்கள் ஆசிரியர்கள்
பத்துப்பாட்டு:
1. நக்கீரர்-திருமுருகாற்றுப்படை ,நெடுநல்வாடை
2. முடத்தாமக்கண்ணியார்-பொருநாராற்றுப்படை
3. உருத்திரங்கண்ணனார்-பெரும்பாணாற்றுப் படை பட்டினப்பாலை.
4. நல்லூர் நத்தத்தனார்-சிறுபாணாற்றுப்படை
5. பெருங்கௌசிகனார்--மலைபடுகடாம் அல்லது கூத்தராற்றுப்படை
6. கபிலர்- குறிஞ்சிப் பாட்டு
7. நப்பூதனார் -முல்லைப்பாட்டு
8. மாங்குடி மருதனார்-- மதுரைக் காஞ்சி.
ஐம்பெருங்காப்பியங்கள்:
1. இளங்கோவடிகள்-- சிலப்பதிகாரம்.
2. சீத்தலைச்சாத்தனார்- மணிமேகலை.
3. திருத்தக்கத்தேவர் -சீவகசிந்தாமணி.
4. நாதகுத்தத்தனார்-குண்டலகேசி.
5. பெயர் தெரியவில்லை- வளையாபதி.
ஐஞ்சிறுங்காப்பியங்கள்:
1. தோலாமொழித் தேவர்-சூளாசமணி
2. பெயர் தெரியவில்லை -உதயணகுமார காவியம்.
3. பெயர் தெரியவில்லை-யசோதரக் காவியம்.
4. பெயர் தெரியவில்லை -நாககுமார காவியம்.
5. வாமன முனிவர் ( உரை எழுதியவர்)-- நீலகேசி.
நாயன்மார்கள்(63 பேர்களுள்):
1. சேக்கிழார் -பெரிய புராணம்.
2. சம்பந்தர் -திருக்கடைக்காப்பு.
3. அப்பர் (திருநாவுக்கரசர் )-தேவாரம்.
4. சுந்தரர் --திருப்பாட்டு.
5. மாணிக்கவாசகர்-- திருவாசகம்.
6. திருமூலர்-- திருமந்திரம்.
இலக்கண நூல்கள்:
1. அகத்தியர்-- அகத்தியம்.
2. தொல்காப்பியம்- தொல்காப்பியர்.
3. நேமி நாதம்-குணவீர பண்டிதர்.
4. தண்டியலங்காரம்- தண்டி.
5. நன்னூல்- பவணந்தி முனிவர்.
6. இலக்கணக் கொத்து- சுவாமிநாத தேசிகர்.
7. இலக்கண விளக்கம்- வைத்தியநாத தேசிகர்.
8. தொன்னூல் விளக்கம் -வீரமா முனிவர்.
9. முத்துவீரியம்- முத்துவீர உபாத்தியாயர்.
10. வீரசோழியம்- புத்தமித்திரர்.
11. சுவாமிநாதம்- சுவாமிநாத கவிராயர்.
12. இலக்கண விளக்கச் சூறாவளி- சிவஞான முனிவர்.
13. உமறுப் புலவர் -சீறாப்புராணம் ,முதுமொழிமாலை ,திருமண வாழ்த்து ,சீதக்காதி ,நொண்டி நாடகம்.
14.குமரகுருபர சுவாமிகள்-- முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ,மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், காசிக் கலம்பகம் ,மீனாட்சியம்மைகுறம், கலகலாவல்லி மாலை, சிதம்பரச் செய்யுட் கோவை ,நீதிநெறி விளக்கம்.
15. திரிகூடராசப்பக் கவிராயர்--திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால பிள்ளைத்தமிழ்.
16. செயங்கொண்டார் --கலிங்கத்துப் பரணி.
17. ஒட்டக்கூத்தர்-- மூவருலா, தக்கையாகப்பரணி,குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ்.
18.கம்பர்-- சரஸ்வதி அந்தாதி ,சடகோபர் அந்தாதி கம்பர் ராமாயணம் ஏரெழுபது சிலை எழுபது திருக்கை வழக்கம்.
19.ராமலிங்க அடிகளார்அடிகள்--திருவருட்பா, ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறைகண்ட வாசகம்.
20. பரஞ்சோதி முனிவர்--திருவிளையாடற் புராணம்,வேதாரண்ய புராணம் ,கலிவெண்பா, திருவிளையாடல் போற்றி, மதுரை பதிற்றுப்பத்து அந்தாதி.
21. அவ்வையார்- ஆத்திசூடி ,மூதுரை, கொன்றை வேந்தன், நல்வழி.
22. மீனாட்சி சுந்தரம்பிள்ளை-- சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
,அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ் .
23. கட்சியப்பர்- கந்த புராணம்.
24. புகழேந்தி -நளவெண்பா.
25. வில்லிபுத்தூரார்-வில்லிபாரதம்.
26. ஆண்டாள் -திருப்பாவை ,நாச்சியார் திருமொழி.
27. அருணகிரிநாதர் -திருப்புகழ்.
28. அதிவீரராம பாண்டியர் -வெற்றிவேற்கை, நைடதம்.
29. உலகநாதர் -உலகநீதி.
30. கொங்கு வேளிர்- பெருங்கதை
31.வீரமாமுனிவர் --ஞானோபதேசம், வாமன் கதை ,பர்வத காண்டம், பரமார்த்த குருகதை (உரைநடை), அடைக்கல மாலை ,கலிவெண்பா, திருக்காவலூர் கலம்பகம் ,(செய்யுள் ),தொன்னூல் விளக்கம் ,கொடுந்தமிழ் இலக்கணம்,( இலக்கண நூல்கள் )சதுரகராதி.
32.பாரதியார்-- கண்ணன் பாட்டு, குயில் பாட்டு ,பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு ,சொர்ணகுமாரி,தராசு ,திண்டிய சாஸ்திரி, சந்திரிகையின் கதை, ஞானரதம் ,வேதாந்தப் பாடல்கள், விநாயகர் நான்மணிமாலை.
33.பாரதிதாசன்--பாண்டியன் பரிசு ,குடும்ப விளக்கு ,இளைஞர் இலக்கியம் ,அழகின் சிரிப்பு ,தமிழ் மயக்கம் ,மணிமேகலை வெண்பா ,இசையமுது ,இருண்டவீடு எதிர்பாராத முத்தம், சௌமியன் ,கலைக்கூத்தின் காதல் ,கண்ணகி புரட்சிக் காப்பியம், தமிழகத்தின் கத்தி.
34. பிசிராந்தையார் --தமிழச்சியின் கத்தி ,குறிஞ்சித் திரட்டு.
35. ஹெச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை--இரட்சணிய யாத்திரிகம்.
36. புலவர் குழந்தை --இராவண காவியம் காமஞ்சரி.
37. சுந்தரம்பிள்ளை-- மனோன்மணியம்.
38.கவிமணி தேசிய வினாயகம் --மலரும் மாலையும், இளந்தென்றல் ,பசுவும் பிள்ளை கன்றும், குழந்தைச் செல்வம், மருமக்கள் வழி மான்மியம் ,உமர்கய்யாம் பாடல்கள் ,ஆசிய ஜோதி.
39.திரு .வி .கல்யாண சுந்தரம்-- முருகன் அல்லது அழகு, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் ,பெண்ணின் பெருமை,தமிழ்தென்றல் ,புதுமை வேட்டல், பொதுமை வேட்டல் ,வாழ்க்கைதுணை நலம் ,நவசக்தி (கிழமை இதழ்) தேசபக்தன்,( நாளிதழ் ).கிறிஸ்துவின் அருள் வேட்டல், சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து.
40.நாமக்கல் கவிஞர்-சங்கொலி, தமிழ்த் தேன்,மலைக்கள்ளன்,கவிதாஞ்சலி,தமிழன் இதயம்,அவளும் அவனும்.
41.கவிஞர் முடியரசன்--பூங்கொடி, மனிதனை தேடுகிறேன், வீரகாவியம், காவிரிப் பாவை, நெஞ்சு பொறுக்குதில்லையே, ஊன்றுகோல், முடியரசன் கவிதைகள்.
42.சிற்பி-சூரிய நிழல்.
43வாணிதாசன்-- தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம் எழிலோவியம், குழந்தை இலக்கியம், பொங்கல் பரிசு இன்ப இலக்கியம், தீர்த்த யாத்திரை.
44. சுரதா --தேன்மழை, துறைமுகம்.
45.கண்ணதாசன்-- அர்த்தமுள்ள இந்து மதம், ஆட்டனத்தி ஆதிமந்தி ,மாங்கனி, தைப்பாவை ,சேரன்மாதேவி ,இயேசு காவியம்.
46.நா.காமராசன்- கல்லறை தொட்டில், கருப்பு மலர்கள் சூரியகாந்தி ,சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்.
47.வைரமுத்து- திருத்தி எழுதிய தீர்ப்புகள், கவியரசன் கவிதை, என் பழைய உரைகள் ,தண்ணீர்தேசம், வைகறை மேகங்கள்.
48.அறிஞர் அண்ணா-- பார்வதிபி.ஏ, ரங்கோன் ராதா ,தசாவதாரம் ஓரிரவு நீதிதேவன் மயக்கம் வேலைக்காரி பிரார்த்தனை குற்றவாளியோ கன்னிப்பெண்கள் ஆன கதை.
49.தி ஜானகிராமன் --அம்மா வந்தாள், மோகமுள் ,மரப்பசு, சிவப்பு ரிக்க்ஷா ,கொட்டு மேளம் ,சிலிர்ப்பு சாத்தியமா, சக்தி வைத்தியம் ,நாலுவேலி நிலம், வடிவேலு வாத்தியார்.
50. மறைமலை அடிகள் --குமுதவல்லி ,கோகிலாம்பாள் கடிதங்கள்.
51. ரகுநாதன் -பஞ்சும் பசியும்.
52.கல்கி -சிவகாமியின் சபதம் ,பொன்னியின் செல்வன் ,பார்த்திபன் கனவு, பொய்மான் காடு ,கள்வனின் காதலி ,அலையோசை ,மகுடபதி, காதார கள்வன்,மயில் விழிமான், ஒற்றை ரோஜா ,திருடன் மகன் திருடன் ,கோத்தாரியின் தாயார்.
53. அரு ராமநாதன் --வீரபாண்டியன் மனைவி ,அசோகன் காதலி ,இராசராச சோழன்.
54. ராஜம் கிருஷ்ணன் --குறிஞ்சித் தேன் ,வளைகரம் வேருக்கு நீர் கரிப்பு மணிகள்
55. சாண்டில்யன்- மலைவாசல் ,கடல்புறா, யவனராணி, ராஜதிலகம், கன்னி.
56. ஜெகசிற்பி--பத்தினிக்கோட்டம் ,நந்திவர்மன் காதலி ,மதுர யாழ் மங்கை, திருச்சிற்றம்பலம்.
57. இந்திரா பார்த்தசாரதி -பசி.
58.அகிலன்-- கயல்விழி ,பாவை விளக்கு, புதுவெள்ளம், பெண் ,பெண் மலர் ,வாழ்வு எங்கே?, நெஞ்சின் அலைகள் ,சித்திரப்பாவை, வேங்கையின் மைந்தன், இதயச்சிறையில், நிலவினிலே ,குறத்தி, குழந்தை சிரித்தது, கங்கா ஸ்நானம், எரிமலை.
59. கி .ஆ .பெ .விசுவநாதன்- தமிழ்ச் செல்வம்.
60.டாக்டர் .மு. வரதராசனார் --அகல்விளக்கு ,பெற்ற மனம், டாக்டர் .அல்லி ,பச்சையப்பர், மனச்சான்று ,காதல் எங்கே?, கரித்துண்டு ,செந்தாமரை, கள்ளோ காவியமோ,குறட்டை ஒலி.
61. என்னாயின புலவர் -முக்கூடற்பள்ளு.
62. சூரிய நாராயண சாஸ்திரி --ரூபாவதி, கலாவதி ,மானவிஜயம், நாடகவியல்.
63. பம்மல் சம்பந்த முதலியார்-மனோகரா.
64.சங்கரதாசு சுவாமிகள்- அபிமன்யு ,சுந்தரி ,பவளக்கொடி ,சதி அனுசுயா, பிரகலாதன், வள்ளி திருமணம்.
65.பி.எஸ்.ராமையா--டாக்டருக்கு மருந்து ,தேரோட்டி மகன்,தழும்பு, மலரும் மனமும்.
66.கே .பாலச்சந்தர்- நீர்க்குமிழி, மெழுகுவர்த்தி ,நாணல் ,எதிர்நீச்சல் ,சர்வர் சுந்தரம், மேஜர் சந்திரகாந்த், நவக்கிரகம்.
67.சோ.ராமசாமி -யாருக்கும் வெட்கமில்லை ,உண்மையே உன் விலை என்ன ?,இரவில் சென்னை, முகமது பின் துக்ளக் ,மனம் ஒரு குரங்கு.
68.மு .கருணாநிதி --காகிதப்பூ ,மந்திரிகுமாரி பராசக்தி ,பூம்புகார், புதையல் ,வெள்ளிக்கிழமை ,ரோமாபுரி பாண்டியன் குரலோவியம் ,தென்பாண்டி சிங்கம், சங்கத்தமிழ், நெஞ்சுக்கு நீதி.
69.ஜெயகாந்தன்- சில நேரங்களில் சில மனிதர்கள், உதயம், ஒரு பிடி சோறு, இனிப்பும் கசப்பும்.
70. கே. சுந்தரம்- வியட்னாம் வீடு.
71.நா. பார்த்தசாரதி-- வலம்புரிச்சங்கு, நெருப்பு கனிகள், குறிஞ்சி மலர் ,பாண்டியன் தேவி, சமுதாய வீதி ,சத்திய வெள்ளம் ,துளசி மாடம்.
72. மாணிக்கவாசகர்-- திருவாசகம், திருச்சிற்றம்பலக் கோவை, திருக்கோவையார்.
73.பிரகாச சுவாமிகள்-- நால்வர் நான்மணிமாலை ,சோனசைவ மாலை ,நன்நெறி, திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கைக்கோவை பிரபுலிங்கலீலை ,காளத்திப் புராணம் ,திருவெங்கை உலா.
74. ராஜாஜி -வியாசர் விருது, சக்கரவர்த்தி.
75. கு. ப .ராஜகோபாலன் -காணாமலே காதல், புனர்ஜென்மம், கனகாம்பரம், விடியுமா?.
76. புதுமைப்பித்தன்-அன்று இரவு ,கடவுளும் கந்தசாமி பிள்ளையும் ,சாபவிமோசனம், காலனும் கிழவியும் ,வழி ,நினைவுப்பாதை, பொன்னகரம், செல்லம்மாள்.
77. வா. ஜகந்நாதன் -பவள மல்லிகை.
78. தி .ஜ .ர.--மரத்தடி கடவுள் ,சந்தானக் காவடி.
79. பண்டித நடேச சாஸ்திரி --திராவிட நாட்டுக் கதைகள்.
80. மலர்க் கண்ணன்- அற்ப ஜீவிகள்.
81. மாயாவி +அகதி.
82. மு.மு.இஸ்மாயில்--இலக்கிய மலர்கள் ,சமுத்திரம் ,வேரில் பழுத்த பலா.
83. உ .வே .சாமிநாத ஐயர் -குளத்தங்கரை ,அரசமரம்.
84. தமிழ் ஒளி (விஜயரங்கம் )--மாதவி காவியம், புத்தர் காவியம்.
85.மு .மேத்தா --சோழ நிலா,அழ .வள்ளியப்பா, சிரிக்கும் பூக்கள் ,வெற்றிக்கு வழி ,நேருவும் குழந்தைகளும்.
86. மணியன் -சொல்லத்தான் நினைக்கிறேன்.
87. வீந்தன் --முல்லைக்கொடியன்.
88. சு. வெங்கடேசன் --காவல் கோட்டம்.
89. பகழிக் கூத்தர் --திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்.
90. முத்துராமலிங்க தேவர்- தேசியம் காத்த செம்மல்.
91. நா.முத்துசாமி ம-நாற்காலிக்காரர்கள்.
தமிழ் மொழி நூல்கள் தமிழ் பொக்கிஷம்கள் வரலாற்று சிறப்புகள் கொண்ட நூல்கள்
பேச்சுத்தமிழ் – உரைநடைத்தமிழ் வேறுபாடுகள்
தமிழ்
கொடுந்தமிழ்
செந்தமிழ்
தனித்தமிழ்
நற்றமிழ்
முத்தமிழ்
துறை வாரியாகத் தமிழ்
அறிவியல் தமிழ்
ஆட்சித் தமிழ்
இசைத்தமிழ்
இயற்றமிழ்/இயல்தமிழ்
சட்டத் தமிழ்
செம்மொழித் தமிழ்
தமிழிசை
நாடகத் தமிழ்
மருத்துவத் தமிழ்
மீனவர் தமிழ்
முஸ்லிம் தமிழ்
பிராமணத் தமிழ்
வட்டார வழக்குகள்
திருநெல்வேலித் தமிழ்
அரிசனப் பேச்சுத் தமிழ்
குமரி மாவட்டத் தமிழ்
கொங்குத் தமிழ்
செட்டிநாட்டுத் தமிழ்
சென்னைத் தமிழ்
மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்
நாஞ்சில் தமிழ்
மணிப்பிரவாளம்
மலேசியத் தமிழ்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
சுனூன் தமிழ்
பெங்களூர் தமிழ்
தமிழ் மொழி வளர்ச்சி
இந்தியா,இலங்கை,மலேசியா, சிங்கப்பூர், ஆகிய நாடுகளில் தமிழ் மொழி அதிக அளவிலும்.
ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு,பிசி, இரீயூனியன்,திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
மலேசியாவில் 543 அரசு பள்ளிகளில் ஆரம்பக் கல்வியாக முழுமையாக தமிழ் மொழியில் கற்பிக்கப்படுகிறன்ன.
இந்தியாவில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் தென்னிந்திய மாநிலங்களான. கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மற்றும் அந்தமான் மற்றும் நீக்கோபார் தீவுகளில் யூனியன் பிரதேசங்கள் குறிப்பிடத்தக்க சிறுபான்மையினரால் தமிழ் பேசப்படுகிறது.
இது இந்தியாவின் 22 திட்டமிடப்பட்ட மொழிகளில் ஒன்றாகும்.
2004 ஜூன் -6 ஆம் நாள் அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் இதனை செம்மொழியாக அறிவித்தார்.
தமிழ் மொழி
முதல் மொழி முது மொழி புது மொழி
காதல் சொல்லும் மொழி கவிதை சொல்லும் மொழி இமயம் தொடும் மொழி இதயம் திருடும் மொழி தரணி போற்றும் மொழி தாய்மொழி தனி மொழி எங்கள் உயிர் மொழி தமிழ் மொழி தமிழ் மொழி தமிழ் மொழி