நிறை மட்டும் தானா வாழ்க்கை
நான் இந்த வலை தளத்தில் இந்த குறுகிய காலத்தில் கவனித்த ஒரு விஷயம், நான் எழுதும் நேர்மறை எண்ணங்களை மட்டுமே அதிகம் பார்த்து வருகின்றனர். நேர்மறைகள் நினறந்தது மட்டுமே வாழ்க்கை என்றால் பின் வாழ்க்கையில், உலகத்தில் பிரச்சினைகளே இருக்காதே. ஒருவனிடம் நல்லது மட்டுமே குடியிருந்தால் ஒவ்வொரு மனிதனும் உயர்ந்த ஞானியாகத்தானே இருக்க வேண்டும். நாம் நம்மிடம் நிறைகளை கூட்ட வேண்டும் எனில், நம்மிடம் உள்ள குறைகளை அறிய வேண்டும் அவற்றை உள்ளபடியே ஏற்று கொள்ள வேண்டும். நான் நல்லவன் என்னிடம் ஏதும் குறைகளே இல்லை என்று சொல்வது, நாம் சுவாசிக்கும் காற்றிலே அசுத்தமே இல்லை என்று சொல்வது போல். இது சாத்தியமா? இல்லவே இல்லை. எனவே வாழ்வின் எந்த ஒரு கால கட்டத்திலும் நிறைவுகளை சார்ந்த குறைகளை ஏற்று கொள்ள வேண்டும். ஆனால்முடிந்த வரையில் குறைகளை களைய ஆவனவற்றை செய்து கொண்டே இருக்க வேண்டும். குறையை நிறையாக ஏற்றுக்கொள்ள வேண்டாம். ஆனால் நிறைகள் அனைத்துமே குறைகளையும் தன்னுள் தாங்கியதே என்பதை அலசி பார்த்து புரிந்து கொண்டு அதற்கேற்ப அனுசரித்து வாழ்ந்திடில் வாழ்வின் தன்மையை புரிந்து அந்த தன்மையின் அழகை ரசித்து வாழலாம்.