கண்ணுக்கு தெரியும் கடல் , காண முடியாத மனம்

கடலின் அலைகள் ஓயாது ஆர்ப்பரிக்கும்
மனதின் அலைகளோ அமைதியை பறிக்கும்

கடல் அலைகள் கண்களுக்கு விருந்து
மன அலைகளோ இரை தேடும் பருந்து

கடலின் நிறம் நீலமாகவே இருக்கும்
எண்ணங்களோ நீளாமாகவே இருக்கும்

கடல் தண்ணீர் அருந்த உப்பு கரிக்கும்
எண்ணங்கள் இன்ப துன்பம் பிரிக்கும்

கடல் அலைகள் நம் கால்களை வருடும்
எண்ண அலைகளோ மனதை நெருடும்

கடலலைகள் திடீரென்று சீற்றம் கொள்ளும்
நினைவுகள் நம்மை கொல்லாமல் கொல்லும்

கடலலைகள் மனதுக்கு ஆறுதலை தரும்
மன உளைச்சல்களோ வேதனை தரும்

கடல் ஆழம் இருப்பினும் அதில் ஓடம் ஓடும்
ஆழமான உள்ளம் உண்மை அன்பை தேடும்

கடலின் நீர்த்துளிகள் மழையாய் பொழியும்
தோல்வி கண்டு கண்களில் கண்ணீர் வழியும்

நதிகள் அனைத்தும் கடலில் வந்து கூடும்
மகிழ்ச்சியில் மனம் தாண்டவம் ஆடும்

கடல் உயிர் கொடுக்கும் உயிர் பறிக்கும்
மனசாட்சி உலுக்கி எடுக்கும், எரிக்கும்

கடல்கள் பூமியின் முக்கால் பகுதியாகும்
அன்பு இருந்தால் அமைதி உறுதியாகும்


ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (7-Jul-21, 7:27 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 940

மேலே