சடங்குகள்

ஆசிரியப் பாக்கள்

என்றோ செய்ததை இன்றும் செய்வன்
பொன்றாய் தொடரல் தமிழ்கலா சாரம்
வெறுங்கை சித்தப்பா வீசிவந் தானாம்
சொட்டுசொல் தவறா சொல்வர் தமிழர்
இவையுடன பலகலா சாரம்
இன்றும் தவறா செய்வது தமிழனே

அதில் ஒன்றாம் காணிக் கையும்
பூபழம் தாம்பூ லத்துடன் சூடன்
சுண்டல் வடிசில் கோயில் செல்ல
கொண்டு போவர் தெய்வகா ணிக்கை
திரும்பையில் அதுபிர சாத மாம்பார்
சுற்றத் துடன்பக் கலிலும் பகிர்வர்
திருப்பதி லட்டு பஞ்சா மிர்தம்
பழனி விசேடம் அறிவோம்
இன்னும் வாழ்க்கையில் பலதை கேளே

குந்தைகள் பிறக்கத் தொட்டி லில்யிட
சிறியக் குழந்தை உடையுடன் செல்வர்
காது குத்தலில் மொய்சவ ரமும்கேள்
பூப்பெய் தால்தட் டுமுட்டு சாமான்
பின்னவ ளுக்குத வுமென
முன்யோ சனையாய் வழங்குவர் பாரே


அன்று திருமணம் என்றால் மாலை
யிரண்டு தவறா கொண்டு செல்வர்
யின்றது மாறி மொய்யுடை கவராம்
உறவுகள் தருவது தங்கம் வெள்ளி
மாப்பிள் ளைத்தோ ழர்க்கும் மோதிரம்
தாலியில் உருப்படி பிரித்துங் கோர்க்க
வளைகாப் பெனில்யிடு வதோக்கை வளை
வைப்பர் வரிசை ஆடி தையென
தலைதீ பாவளி பட்டு சேலை
வேட்டி மோதிரம் இத்யாதி
நோன்பு தவறா இனிப்பு செல்லுமே

இறப்பெனில் நல்ல மாலை ஒன்று
சம்மந் திவீட்டார் பொறுப்பாம் சமையல்
ஐந்து எட்டெனப் படையல் போட
சம்மந் திகாரியத் தில்தலை கட்டல்
கசப்பு முப்பது என்பர்
ஏரா ளமத்தனை யுங்கலா சாரமே

இன்றேனோ கையுட்டும் நல்ல கலாசாரம்
என்றுமாறிப் போயிற்று இங்கு




.

குறள் வெண்பா

..........

எழுதியவர் : பழனி ராஜன் l (8-Jul-21, 10:25 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 29

மேலே