கள்வனின் காதலி

சுதா ஒரு தனியார் நிறுவனத்தில் முதலாளிக்கு உதவியாளராகப் பணிபுரிகிறாள். அவள் வாங்கும் சம்பளம் வாய்க்கும் வயிற்றுக்குமே சரியாக இருந்தது. அவளுடன் அவள் அப்பா, தங்கை இருவரும் இருகின்றனர். அப்பா மொடாக் குடியர். சுதாவின் சம்பளத்தில் தான் அந்தக் குடும்பமே நடந்தது.

அப்பொழுதுதான் அவள் மகேஷை சந்தித்தாள். மகேஷ் அந்த நிறுவனத்துக்கு புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கணிணிப் பொறியாளன். நமிக அழகாக இருப்பான். அங்கு உள்ள பெண்கள் அனைவருமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக் கொண்டு அவனிடம் பேச ஆசைப்படுவார்கள். ஆனால் சுதா மட்டும் அவனை சட்டை செய்யவில்லை.

மகேஷ் அவளின் அமைதியால் ஈர்க்கப்பட்டான். அவனே வலிய சென்று அவளிடம் பேச விரும்பினான். ஆனால் சுதா அவள் வீட்டு நிலைமைப் புரிந்து அமைதியாக இருந்தாள். இப்படியே நாட்கள் பறந்தது. இப்பொழுது சுதாவும் அவனால் ஈர்க்கப்பட்டு ஒன்றிரண்டு வார்த்தைகள் பேச ஆரம்பித்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கினர்.

சில சமயம் மகேஷ் வெளியெ சென்றால் நீண்ட நேரம் கழித்துதான் அலுவலகத்திற்கு வருவான். சுதா என்னவென்று கேட்டால் சரியாக பதில் சொல்லாமல் மழுப்பி விடுவான். தனியாக சென்று ஃபோன் பேசிவிட்டு வருவான். ஒரு நாள் சுதா கழிப்பறைக்கு செல்லும் போது மகேஷ் யாருடனோ தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டாள். "டேய் சுதாகர் இப்பதான் அந்த சுதாவை வளைத்துப் போட்டுள்ளேன். கொஞ்ச நாள் போகட்டும், அந்த கோடிங்கை எப்படியாவது கண்டுபிடித்து விடுகிறேன்", என்று கூறியதைக் கேட்டு அதிர்ச்சியுடன் தன்னுடைய இருக்கையில் தொப்பென விழுந்தாள். பக்கத்தில் இருந்த அவளுடைய தோழி கவிதா, " என்னடி சுதா ஆச்சு பேயறைந்ததைப் போல வருகிறாய்", என்று கேட்டாள். சுதா ஒன்றுமில்லை எனக் கூறிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டாள்.

மறுநாள் மகேஷ் வெளியே செல்வதை பார்த்த சுதா அவன் பின்னாலேயே சென்றாள். அவன் அருகிலிருக்கும் காபி பாரில் உட்கார்ந்து யாரையோ எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான். சுதா அவனுக்குத் தெரியாமல் பின்னால் இருக்கும் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள். அப்பொழுது அவனுடைய நண்பன் சுதாகர் வந்து அமர்ந்தான். இருவரும் அந்தக் கோடிங்கை எப்படி திருடுவது என்று திட்டம் போட்டுவிட்டு பிரிந்து சென்றனர். இவையனைத்தையும் கேட்ட சுதா அதை தன் கைப்பேசியில் பதிவு செய்து கொண்டு அலுவலகத்திற்கு விரைந்தாள்.

தன் முதலாளியிடம் நடந்ததை எல்லாம் கூறினாள். அப்பொழுது திரை மறைவிலிருந்து வெளியே வந்தான் மகேஷ். முதலாளியும் மகேஷும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். அதை பார்த்த சுதாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

அப்பொழுது முதலாளி சுதாவிடம் "இவன் வேறு யாருமில்லை என் மகன் தான். எனக்குப்பிறகு என் கம்பெனி நிர்வாகத்தைப் பர்த்துக்கொள்ளப் போகிறவன். நான் உன்னையே அவனுக்கு உதவியாளராக வைத்துக் கொள்ளச் சொன்னேன். அனால் அவனொ நான் நம்பிக்கையானவளா என்று சோதித்த பின்புதான் நம்புவேன், என்று கூறிவிட்டான், மன்னித்துக் கொள்ளம்மா என்று விளக்கினார்.

மகேஷ் சுதாவிடம் என் நம்பிக்கைக்கு தகுந்தவள் நீ என் வாழ்க்கைத் துணையாக வந்தால் என் வாழ்வும் சிறக்கும் என்று கூற அவள் பயத்துடன் முதலாளியைப் பார்த்தாள். அவர் சிரித்துக் கொண்டே எனக்கு எல்லாம் தெரியும் சுதா, நீதான் என் வீட்டு மருமகள் என்று கூற அவள் வெட்கத்தில் தலை குனிந்தாள்.

எழுதியவர் : ரம்யா பாலஜி (8-Jul-21, 11:44 am)
சேர்த்தது : Ramya Balaji
Tanglish : kalvanin kathali
பார்வை : 258

மேலே