மன ஊஞ்சல்
கவிதை
மன ஊஞ்சல் !
கவிஞர் பூ.சுப்ரமணியன்.
ஆட்டுவித்தால்
ஆடுகிறது ஊஞ்சல்
ஆடாமல் அசையாமல்
இருந்து விட்டது
ஆடுவார் இல்லாமல்
முன்னோர்கள் ஆடிய
இந்த மரஊஞ்சல்!
மனம் என்னும் ஊஞ்சல்
ஆட்டுவிப்பார் யார்?
ஆடுபவர் யார்?
அறிந்து கொள்ளாமல்
ஆடிக்கொண்டிருக்கிறோம்!
ஆடுவார் இல்லாமல்
அங்கும் இங்கும்
ஆடி ஓடிக்
கொண்டிருக்கிறது
இமைப்பொழுதும்
நீங்காமல் நிற்காமல்
நிறுத்துபவர் யாரும் இல்லாமல்
மனம் என்னும் ஊஞ்சல்!
பூ. சுப்ரமணியன்
பள்ளிக்கரணை, சென்னை