கண்ணெல்லாம் கடலென

கல்லுக்குள்ளும் ஈரமென
நெஞ்சுக்குள்ளும் ஏங்கி
தயக்கம் தடமானதல்லவா...

கண்ணெல்லாம் கடலென
கண்ணீரெல்லாம் தேங்கி
நிற்கும் இடமானதல்லவா.

மாமழை ஆக பொழிந்தாயே
என் கனவிலே..
பூமாலை ஆக கோர்ப்பேனே
என் நெனப்பிலே...

மாயம் செய்யும்
உன் மந்திரகண்ணிலே
மயங்க வைத்தாயே காதலிலே...

ஒழிவு மறைவில்லாமல்
ஒருத்தி ஓ மேல் ஆசைவைத்தேன்
ஒழிந்துமறைந்து பார்த்து
ஏ காதல கனவிலே ஆசையாய்
வளர்த்து ...

தனித்து ஒன்ன மட்டும் நினைத்து தவித்தேன் .
அறுந்து போனதென்றாலும்
உன் அன்பு . அதை கட்டிமுடியும்
என் அன்பு ...

உன் கண்ணாலே கண்டேனே
உன்னுள்ளே இருக்கும் காதல

அகம் ஒன்று வைத்து கொண்டு
புறம் ஒன்று பேசிபுட்டு வீசாதே
அடியே வீசாதடி ஏ ஆசைய...

உள்ளுக்குள்ளே ஏங்கி ஏங்கி
கண்ணீர் இல்லாமல் அழுது அழுது
வாழுறன் வாழ்க்கைய...

ஏன்..? அன்ப தொலைந்தாயே...
என்ன மறந்தாயே...

நீ என்ன மறந்தும் நான் உன்னில்
கரைந்தனே...

எழுதியவர் : BARATHRAJ M (8-Jul-21, 11:50 am)
சேர்த்தது : BARATHRAJ M
பார்வை : 53

மேலே