பதார்த்த குண சிந்தாமணி – பாயிரம் - காப்பு - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
ஆதி யுமைக்கருளும் அற்புதசிந் தாமணியை
ஆதி யுமையருளால் அம்புவியுட் - கோதறுநற்
செந்தமிழாற் கூறுதற்குச் செம்பவள வேழமுகன்
கந்தமலர்ச் செஞ்சரணே காப்பு 1 – தேரையர்
- பதார்த்த குண சிந்தாமணி
சிவபிரான் உமையாளுக்கு உரைத்த பதார்த்த குணசிந்தாமணி எனும் நூலை குற்றமற இயற்றுதற்கு விநாயகரின் திருவடிகளே காப்பாகும்.