என் தந்தை

கதாநாயகன் என் தந்தை
மேஜை இருந்தால் தான் படிப்பேன் என பிடிவாதம் பிடித்த போது
10 நாள் இரவில், தச்சுப் பணி செய்து மேசையை கொடுத்த வித்தகனே

டியூஷன் செல்லாமல் வேறிடம் சென்று வந்து பொய் சொன்ன போது
காரணம் கேட்டு, என்றும் உண்மையே பேச வைத்த குருவே

முதுநிலை படிப்பில் நான் பின் தங்கியிருந்த வேளையில்
என்னை ஊக்கமூட்டி முதல் வகுப்பில் தேர்ச்சி பெறச் செய்த ஆசானே

பொருட்கள் பழுதடைந்தால், புதிது வாங்காமல்,அவற்றை சரி செய்து, பணத்தை விரயமாக்காமல், உபயோகப்படுத்திய நல்லவரே

எப்பொழுதும் கணக்கு எழுத வேணடும் என்றும், வீண் செலவு செய்த போது எப்படி தவிர்க்க வேண்டும் என அறிவுரை கூறிய உத்தமரே

எங்களுக்காக சேர்த்து வைக்க வேண்டுமென்பதற்காக
எப்பொழுதும் மிதிவண்டி, பேருந்தில் பிரயாணம் செய்தவரே

ஒய்வு பெற்றவுடன் பிறந்த ஊருக்கே திரும்பி தோட்டம் அமைத்து
காய்கறிகளை பயரிட்டு பிறருக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவரே

என்றுமே உழைப்பே உயர்வுக்கு வழி என்றும்
கடன் வாங்கக் கூடாது என வாழ்ந்து காட்டிய தந்தையே

இன்று நீர் மறைந்துவிட்டாலும் உன் அயராத உழைப்பும்
கண்டிப்பும் எங்களின் வாழ்விற்கு பலம் தந்த ஊன்றுகோல்
உன் வாழ்வு எங்கள் வழித்தோன்றல்களுக்கு சிறந்த மைல்கல்


ராரே

எழுதியவர் : ராரே (11-Jul-21, 1:55 pm)
சேர்த்தது : ராரே
Tanglish : en thanthai
பார்வை : 52

மேலே