அன்பை சுரந்து என்னை மறந்தாள்

ஒரு நாள் ஒரு ஆள், கையில் பேனா-வாள்
நானே அந்த ஆள் என்று அவள் அறிவாள்
கொடுத்தாள் என்னிடம் வெள்ளைத்தாள்
எடு பேனா-வாளை, அதுவே உன் அரிவாள்
நான் எழுதி கொல்பவன் என உணர்ந்தாள்
என்னை கவிதையில் சொல் என பணித்தாள்
எழுதியதை கண்டு படித்தாள், பின் சிரித்தாள்
அறுவையான அறுசுவை நீ என விவரித்தாள்
நான் அதிர்ச்சியுற்றேன் அவள் கவனித்தாள்
நீ அருமையான சுவை என்று சமாளித்தாள்
என்னை வைத்த விழி வாங்காமல் பார்த்தாள்
பின் என் கையோடு அவளின் கை கோர்த்தாள்
விலகினாள், சில நாள் என்னை விலக்கினாள்
மீண்டும் என்(கவிதை)மேல் காதல் கொண்டாள்
என்னை தொட்டாள், கவிதையை முத்தமிட்டாள்
கவிதையை கிள்ளினாள், என்னை தள்ளினாள்
ஒரு நாள் இரு நாள் என பல நாள் இருந்தாள்
நான் மண நாள் காண பயனாய் அமைந்தாள்
மணமேடையில் என் பக்கத்தில் அமர்ந்தாள்
தாலி கட்டுகையில் என் கண்களை கண்டாள்
மாலை நலங்கில் என் கைகளை அழுத்தினாள்
உண்ணுகையில் விரலை வாயில் திணித்தாள்
முதல் இரவில் பாலுடன் அருகில் அழைத்தாள்
காற்று போகாமல் என்னை கட்டி அணைத்தாள்
நான் மயங்கிய உடன் விளக்கை அணைத்தாள்
இனிமையான காதல் கணைகளை தொடுத்தாள்
என் கைகள் பட்டு மிரண்டாள், பின்பு புரண்டாள்

இவ்வளவு கனவினை கொடுத்தவள் பறந்தாள்
கவிதை தாளை கிழித்தாள், என்னை மறந்தாள்
இவ்வுலகை விட்டு அவள் எங்கே சென்றாள்???

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (11-Jul-21, 2:39 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 296

மேலே