வாழ்ந்துவரும் உயிர்

கண்ணிலே கனாவும்
மறையாமா ஒழியுதே ...
நெஞ்சிலே நினைவும்
குறையாமா வழியுதே ...

சேர்ந்துவாழும் நேரம்
வாழ்ந்துவரும் உயிரும் ...
உறவே பிரியவே
உயிரே பிரியும் ...

கிணற்று தவளை
போலே
சுற்றம் உலகை
அறியாமலே...
முற்றும் மறந்தேன்
உள்ளம் அறிந்தேன் ...

நீ நான்
ஒன்றாவோம் ...
நாம்
என்றாவோம் ...

நதியில் நீந்தாமலே
கடல் சேரும்
மீனாவோம்...

வானில் பறக்காமலே
துள்ளி போகும்
தும்பி போலாவோம்...

குக்கிராம மனசுல
கிலோகிராமுல
காதல் எடை போடுதே ...

இமையை
இறுக்கி கொண்டதும்
விழிவெளி வரும்
கண்ணீர் சுடுதே ...

உறுதுணையா
நீ வந்ததும் ...
உயிர்இணை சேரும்
காதல் தொடுதே ...

இரவிலே களவாடும்
உயிரிலே உறவாடும்
கூடல் தருதே ...

எழுதியவர் : BARATHRAJ M (11-Jul-21, 4:04 pm)
சேர்த்தது : BARATHRAJ M
பார்வை : 46

மேலே