இதயவன்

என் அவளே நீயே நீயடி...
என் நீளும் காதல் நீயே நீயடி.!

என் கண்கள் காணும் காணல்
நீயே நீயே கண்ணே...!

என் இதயவன் தேடும் தேடல்
நீயே நீயே அன்பே..!

நெடுந்தூரம் பிறிந்தே சென்றாலும் நீ!

ஊற்றுநீர்ப் போலவே உள்ளுணர்வு
உறுதே உன்னாலே..

நிலா அது
இரவினில் நீரில் விழுந்து

காற்றின் அலையாலே பகலினில்
மிதந்து மிதந்து மீண்டது தானோ...

அது போல அன்பாலே மீண்டும்
மீளாத காதலும்...

என்னுள் கனவுகள் நூறு
நினைவுகள் ஆயிரமாயிரம்
காரணம் நீயும் உன் மாறாத காதலும்...

மௌன மனமொழி பேசி
காதல் வீசினேன்...
அதனை பிடித்து
விழி தூது செய்யேன் ...

ஏற்று என்னன்பை உனக்கு
கொடுத்து காதல் செய்ய
பாத்திருக்கேன் ...

கால்வாரிபுட்டு போகிற காதல
நெஞ்சுல நெனச்சுகிட்டு
கையில இறுக்கி புடிச்சுகிட்டு
காத்திருக்கேன் ...

எழுதியவர் : BARATHRAJ M (11-Jul-21, 4:25 pm)
சேர்த்தது : BARATHRAJ M
Tanglish : Idhayavan
பார்வை : 65

மேலே