உள்ளத்தை கொன்றுவிட்டாய்

நத்தை போல் வார்த்தைகளால்
ஊர்ந்து/
மெத்தை வரை அன்பை
வளர்ப்போம் /
எனக் குறும்பாய் சுவையோடு வம்பளர்ந்து /
அரும்பு மனசை தூண்டியாய்
இழுத்தவனே/

கொத்தோடு மலர்களைக் கையினில் கொடுத்து /
கண்ணாலே மயக்கி முன்னாலும் பின்னாலும் நோக்கி/
மத்தாப்பு பேச்சினால் நெஞ்சத்தை அணைத்தவனே /

பத்தாம் வகுப்புப் பாடத்தை சுத்தமாய் அழித்தாய் /
சிந்தனைக்குள் கொண்டு வந்து உன்னை நுழைத்தாய் /
சின்னப் பொண்ணு இதயத்தை உன் மாளிகையாக்கினாய்/

பக்கம் வந்து வெட்கம் பரப்பி/ சொன்னாயே ஒரு சொல் /
சொத்துச் சுகம் வேண்டாம் /
சொந்தமென வந்து விடு என்று /

இணைந்தோம் வேலியின் அகலம் பார்த்தோம்/
காதலை வளர்த்து ஆழத்தை ஆழியோடு ஒப்பிட்டோம்/
அழகாய் சொல் எடுத்து கவிதை சமைத்தோம் /
கடலை விட நம் காதலே ஆழமென களிப்புற்றோம் /

அத்தனையும் இப்போது என்னாச்சு
இன்னொருத்தியோடு கொடுத்தாயே நெருக்கமாய் காட்சி /
உணர்வைக் கெடுத்து உயிரை
எரித்து /
உள்ளத்தைக் கொன்று விட்டாய் /
பித்தனே உமக்கில்லையோ மனச்சாட்சி/

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (11-Jul-21, 1:34 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 363

மேலே