கல்லுப்பு - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
ஐயமறுஞ் சூலை அரோசிபித்தம் சர்த்தியொடு
வெய்யபிணி அஷ்டகுன்மம் விட்டேகும் - பெய்வளையே
வாதமதி தாகம் மலக்கட்டும் போம்உலகில்
கோதறுகல் உப்பைக் கொடு
- பதார்த்த குண சிந்தாமணி
கல்லுப்பு கபம், குத்தல், சுவையின்மை, பித்தம், வாந்தி, உட்டிண வாயு, எண்வகைக் குன்மம், வாத நோய், நாவறட்சி, மலக்கட்டு இவற்றை நீக்கும்