நீலப்பொழில் பசுஞ்சோலையில் இரவில் நிலவில்
பாலை மணல் வெளியில்
ஒரு ரோஜா
வாடிக் கொண்டிருந்தது
எடுத்து வந்தேன்
காத்திருந்தேன் நீலப்பொழில் பசுஞ்சோலையில்
இரவில் நிலவில்
அவள் வந்தாள்
கையிலிருந்து எடுத்தாள்
காதோரத்தில் சூடிக்கொண்டாள்
அவளுடன் ரோஜா மகிழ்ந்தது... நிலவும்
நானென்ன விதிவிலக்கா
ரசித்தேன் மகிழ்ந்தேன் அழைத்தேன்
அருகில் வந்து அமர்ந்தாள் தோள்சாய்ந்தாள்
நிலவு இன்னும் மகிழ்ந்தது !