அவள் வருவாளா

முட்கள் நிறைந்த கள்ளியாய்
காய்ந்து போன வறண்ட பூமியாய்
நீர் பசப்பில்லா நிலமாய்
குவியலான மணல் பரப்புகளாய்
கொளுத்தும் வெயிலாய்
காட்சியளிக்கிறது...
பசுந்தளிராய் இருந்த
என் மனத்தோட்டம்
பாவை அவள்
பறந்து சென்றதால்
பாலைவனமாக இன்று..!!

மலர் சூடும் மங்கையாக
என் நந்தவனத்தை
மலரச் செய்வாளா?
என் மனத்தோட்டத்தை
குளிரச் செய்வாளா?
என் பாலைவனத்தை
சோலையாக்கித் தருவாளா?
பட்டத்து ராணியாக
என் கரம் பிடிக்க
பாவை அவள் வருவாளா..!!

எழுதியவர் : Pandiselvi azhagarsamy (15-Jul-21, 4:17 pm)
பார்வை : 291

மேலே