பேரானந்த பலூன்கள்
பேரானந்த பலூன்கள்
====================
மேளதாளம்
போலிப்புன்னகை புகைப்படங்கள்
விருந்துகள் என எதிலும் நாட்டமில்லை
அலங்கரிக்கப்பட்டிருந்த பலூன்களைக் கண்டதிலிருந்து
அதனூடே ஆடிக்கொண்டிருந்தது
குட்டீஸ் மனம்
அற்றுக்கொண்டு பறந்த ஒரு பலூன்
தூரப்போய் கீழவிழ
பூரிப்பாய் அதை எடுத்துக்கொண்ட
குழந்தையுடன் சேர்ந்து மகிழ்ந்தது
குட்டீஸ் மனம்
சட்டென வெடித்த பலூனுக்காக
முதலில் பதறினாலும்
அதை பூமி உருண்டையாய்
உருமாற்றிய சிறுவன்
விசில் சத்தமெழுப்ப அதுனோடு சேர்ந்து
கூடவே சத்தமிட்டது குட்டீஸ் மனம்
இறுதியாய் கிளம்பும் வேளையில்
ஒவ்வொரு மழலைக்கும்
நான்கு பலூன்களை
எண்ணிக்கொடுத்தபோது
தான் பிறந்த பலனை முழுதாய்ப் பெற்றதாய்
மகிழ்கின்றன
குட்டீஸ் மனம் கொண்ட
பேரானந்த பலூன்கள்
அ.வேளாங்கண்ணி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
