ஏற்றம்

ஏற்றம்
=======

உச்சிமரத்துக் கிளையேறி
அடுத்த விநாடி
விழுந்துவிடுகிற மாதிரியே
விளையாட்டு காட்டிக்கொண்டிருக்கிறது
மந்திக்கூட்டம்!

உச்சிமலை மீதேறி
அடுத்த நொடி
பெய்துவிடுகிற மாதிரியே
போக்குக் காட்டிக்கொண்டிருக்கிறது
மேகக்கூட்டம்!

உச்சிமண்டை ஏறிவிட்டு
அடுத்த கணம்
காதலில் விழுந்து விடுகிற மாதிரியே
மாயாஜாலம் செய்யும் வித்தையைக்
கற்றிருக்கிறாள் தோழி!

அ.வேளாங்கண்ணி

எழுதியவர் : A வேளாங்கண்ணி (18-Jul-21, 10:58 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 95

மேலே