மின்சார ரயில் பயணம்
#பயண கட்டணம் என்னவோ சிறியதாய் தெரிந்தாலும், அதை வாங்க நிற்கும் வரிசை நம்மை வியக்க வைக்கிறது!
#பள்ளி,கல்லூரி மாணவர்கள் மற்றும் வெவ்வேறு இடத்திற்கு பணிக்கு செல்வோர் என்று பாதுகாப்பாய் கொண்டு செல்லும் Escalator!
#காலை பயணத்தின் போது பலருக்கும் கையேந்தி பவனாகவும், மாலை வேளைகளில் காபி கடையாகவும் மக்களின் பசியை போக்குகிறது!
#சிட்டாய் பறக்கும் ரெக்கை இல்லா பட்டாம்பூச்சி வெறும் சில்லறைகளில் நமக்கு ஊரை சுற்றி காட்டிவிடுகிறது!
#தொடர் வண்டியில் தொடர்ந்த 2நாள் பயணம்,பரிட்சயம் இல்லா மனிதர்களையும் பாசமாய் பழக வைக்கிறது!
#அவசரமாய் செல்வோரின் அவசர ஊர்தி!
#பிரிந்தே செல்லும் தண்டவாளங்கள், எங்கு சென்று சேர்கிறது என்பதை பார்க்க அதனை தொடர்ந்து செல்லும் இந்த ரயில் பெட்டிகளுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சுகிறது!
#ஒரே சமயத்தில் சுமார் 2000பயணிகளை ஏற்றிச்செல்லும் Train'ஐ இயக்கும் அந்த இயக்கி இயந்திர மனிதனா என்ன???
#தட தடவென்று தாளம் போட்டு,
சிக்கு புக்கு என்று பாடிக்கொண்டு நகரும் ரயில்கள் எங்கு சென்று இசை கற்றுக்கொண்டது!
மொத்தத்தில் இன்று நான் கண்ட ரயில் பயணம்
~அழகானது,
~ஆபத்தற்றது,
~இனிமையானது,
~ஈடு இணை இல்லா தரை வழிப்பயணம்
~உரிய நேரத்திற்கு கொண்டு சேர்த்தது
~ஊஞ்சலாய் தாலாட்டிய ஊர்தி
~எளிய மக்களின் aeroplane
~ஏ. சி காற்றும் தோற்று விடும் இதன் ஜன்னல் ஓர பயணம்
~ஐந்து நிமிடத்தின் அருமையை உணர்த்திய நான் தவற விட்டு ரயிலே உன்னை பார்த்து கேட்கிறேன்
~ஒவ்வொரு நாளும்
~ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் உன் சக்கரத்திற்கு
~ஒளடதம் தான் என்ன?
~ஃ - முற்றுப்புள்ளி இல்லா அடுத்த ரயில் பயணத்தை எதிர்பார்த்து இன்று நான் பயணித்த ரயிலில் இருந்து இறங்குகிறேன்!!!
$®!