~நான் இயற்றிய திருக்குறள்~
அதிகாரம்-
'மதம் மறப்போம் மனிதம் காப்போம்'
#உயிர்வாழ தேவையான உதிரத்திற்கு பிரிவு
மதத்தில் அல்ல வகையில்!!!
#அன்பு இரக்கம் கருணை ஈகை
இவையே உண்மையான மதங்களாகும்!!!
#மனிதம் மறந்து மதத்திகற்காக மிருகங்களாய்
மாறுவோர் மடையர்களாய் மதிக்கப்படுவர்!!!
#அப்பழுக்கற்ற வழியில் மனிதனை பயணம்
மேற்கொள்ளச்செய்வதே சிறந்த மதம்!!!
#மதம் பாதிபுரிந்தவன் மதவாதி புரியாதவன்
தீவிரவாதி, புரிந்தவனே மனிதனாகிறான்!!!
#எம்மதமும் சம்மதமென்பது வரியாக இல்லாது வாழ்க்கையானால் என்றும் வளமே!!!
#தீபாவAli மற்றும் Ramaலான் பன்டிகையன்று
இருமதத்திற்கும் விடுமுறை தினமே!!!
#இடிக்க வேண்டியது கோவில்/மசூதி இல்லை
மனிதனின் மக்காத மதஎண்ணங்களே!!!
#கீதை குர்ஆன் பைபில் மதநூல்கள்
அல்ல மனிதநூல்கள் ஆகும்!!!
#சான்றோர் தேடும் மாற்றம் மதத்திலல்ல
மகத்தான மனித வாழ்வில்!!!
திருவள்ளுவர்
ஹிந்துவா
இஸ்லாமியரா
கிறிஸ்தவரா
என்ற அறிவற்ற ஆராய்ச்சி தேவையில்லை
திருக்குறளையோ, வள்ளுவனையோ நீங்கள்
படிக்க வேண்டாம்
பின் பற்றவும் வேண்டாம்
ஆனால்,
பின்னால் வரும் சந்ததியினருக்காக
நாம் அதை பாதுகாக்க வேண்டும்!
மதத்தின் பெயரால் அதில் இருக்கும்
மகத்துவத்தை மண்ணோடு மண்ணாய்
புதைத்துவிடாதீர்கள்!!!
மனிதன் பிரித்த மதங்களே தற்போது
மனிதர்களை பிரித்து விடுகின்றன,
மதம் என்ற ஒற்றை சொல்லே
சிலர் வாழ்க்கையை சூறையாடிச்செல்கிறது,
ஒன்றே குலம் ஒருவனே தேவன், என்ற உணர்வோடு ஒற்றுமையாய் வாழ்வோம்!!!
வாழ்க தமிழ்!!!
வளர்க என் தாய் தமிழ்நாடு!!!
~$®!