பச்சையாற்று நீர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பச்சையாற் றுப்புனலைப் பார்த்துவந்த பேர்தமக்கு
நச்சிருமல் ஈளைகபம் நண்ணுங்காண் - நிச்சயமா
யவ்வளவோ வென்னி லனிலமுதி ரக்கடுப்புங்
கவ்வுசுர முங்காணுங் காண்

- பதார்த்த குண சிந்தாமணி

இதனைப் பருகுவதால் நச்சிருமல், இரைப்பு, கபம், வாதம், இரத்தக்கடுப்பு, சுரம் இவை உண்டாகும் என்பர்.

பச்சையாறு:

பச்சையாறு மேற்குத் தொடர்ச்சி மலைகளின் கிழக்குச்சரிவில் தோன்றும் ஓர் ஆறு; இது தமிழகப் பகுதியில் உற்பத்தியாகி ஓடிப் பின்னர் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது; இதன் குறுக்கே வடக்கு பச்சையாறு அணை 2004 ஆம் ஆண்டு கட்டப்பட்டது; இவ்வாற்றின் நீளம் 32 கிலோமீட்டர்கள் ஆகும்

பச்சையாறு பாசன வசதி

பச்சையாற்றின் மேலே பாசன வசதிக்காக ஒன்பது அணைக்கட்டுக்கள் கட்டப்பட்டுள்ளன

எண் அணைக்கட்டின் பெயர் பதிவுசெய்யப்பட்ட ஆயக்கட்டு

1 முக்கொம்பு அணைக்கட்டு 41.02 ஏக்கர்
2 மடத்து அணைக்கட்டு 141.33 ஏக்கர்
3 பாலம்பத்து அணைக்கட்டு 438.89 ஹெக்டர்
4 பத்மநேரி அணைக்கட்டு 681.48 ஏக்கர்
5 சம்பான்குளம் அணைக்கட்டு 38.40 ஏக்கர்
6 தேவநல்லூர் அணைக்கட்டு 610.70 ஹெக்டர்
7 காட்டாளை காடுவெட்டி அணைக்கட்டு 85.26 ஹெக்டர்
8 சுப்புக்குட்டி அணைக்கட்டு 2690.87 ஏக்கர்
9 பொன்னாக்குடி அணைக்கட்டு 1383.51 ஏக்கர்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jul-21, 7:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே