காதல் கனவு
அவள் முதல் முதலாய் என்னைப்பார்த்து
செம்பவள வாய்திறந்து மெல்ல சிரித்தாள்
சிரிக்கும்போது கமலமாம் அவள் கண்ணிரண்டும்
மூடி திறந்து அபிநயம் புரிய அதிலிருந்து
கிளம்பிய காதல் தென்றல் என்னை அணைக்க
என்னை மறந்த நான் இப்போது கனவுலகில்...
இன்பக்கனவு இது நனவாகும் நாள் தேடி நான்