எது கவிதை

உணர்வின்
வெளிப்பாடு
கவிதையா...?
அல்ல
உள்ளத்தின்
வெளிப்பாடு
கவிதையா...?
காயத்தின்
கதைப்பின்னல்
கவிதையா...?
அல்ல
வலியின்
வீரியம்
கவிதையா...?
ஏமாற்றத்தின்
எதிர் வாதம்
கவிதையா...?
அல்ல
அடிமையின்
ஆதங்கம்
கவிதையா...?
ஆச்சர்யத்தின்
அழகியல்
கவிதையா...?
அல்ல
அறியாமையின்
அடிக்குறிப்பு
கவிதையா...?
காதலின்
தீவிரம்
கவிதையா...?
அல்ல
கண்ணீரின்
துயரம்
கவிதையா...?

எழுதியவர் : தமிழ் வழியன் (25-Jul-21, 12:09 pm)
சேர்த்தது : தமிழ் வழியன்
Tanglish : ethu kavithai
பார்வை : 102

மேலே