வாழ்ந்தேன் இருளுள்

இருள் சூழும் நிழலில் என்னை விட்டு சென்றாய்

நீரும் நெருப்பாயின, நாளும் கசப்பாயின

உற்றாரும் விலக, உருகுநிலை அடைய
கற்றதும் கசக்க நேரமும் வெறுக்க ...

காதலும் கடக்க எம நாட்களும் கழிக்க

என் கண்ணிர் மழ்க, உடைந்த மனம் இருக

பக்குவ மனநிலை , அனுமானம் ஈடிணை

வாழ்க்கை நெறி கற்க் , அதை நினைத்து சிரிக்க..

இருளிலே வாழ்ந்த எனக்கு, முற்பாதை போதும்...

பாலைவன பறவை போல் நான் காத்திருப்பேன்...

என் கரத்தை பிடித்து செல், உன் மலை பாதையில்..

நீ வீசும் திசைக்கேற்ப உனை தொடர்கிறேன்....

ஒருமுறை உன் முகத்தை பார்க்க வரம் தருவாயாக...

தருவாயின் உன் மடியில் உறங்க, என் இமைகள் மறைய....

இருள்சூழ்ந்த நரக வாழ்க்கையே!!! மன்னித்துக்கொள்

எனை பெற்றவளிடம் செல்கிறேன், என்மகிழ் நிறைய மாய உலகிற்குள்......

எழுதியவர் : ஹரி கிருஷ்ணன் ஆ (25-Jul-21, 11:41 am)
சேர்த்தது : V A ஹரி கிருஷ்ணன்
பார்வை : 80

மேலே