வரலாறு படை

பீடி கட்டிற்க்கும்,
மது குடுவைக்கும்,
மகுடி வாசித்து மூடத்தனமாய் முடங்கிக் கிடந்த காலங்கள் கரையட்டும்...!

உடலிர்க்கும்,
உணர்விர்க்கும்
பசி எடுத்தால்
பா (வை) வப்பெண்ணாக
பரிணமித்தது போதும்...
இனியாவது
அஞ்னிச்சிறகாய்
அவதரி...!

புகைப்படலம் சூடிய அடுப்படி உன் அரண்மனை இல்லை...!
ஊது குழல் உன் செங்கோல் இல்லை...!

மடையர்களுக்கு
மந்திரியாய்
மாறடித்தது போதும்
சீறிட்டு சிங்கப்பெண்
என்று சீருடை உடுத்து...!

அடையாளம் தேடித்தேடி
நீ அனாதையாய் மாறி விடாதே
அடையாளம் நீ என அந்நியரை தேடவை...!

உன்னைக் கேளி கிண்டல் செய்வோரை கோடிட்டு ஒதுக்கி
நீ கேளிச்சித்திரமாக்கிக் கொள்...!

ஆணிற்கு பெண் சமம் என்ற சலுகையை மாற்றி
பெண்ணிற்கு ஆண் சமம் என்ற சரித்திரம் இயற்று
வா இனி ஒரு உலகம் செய்வோம்...!


கவிஞர்
தமிழ் வழியன்

எழுதியவர் : தமிழ் வழியன் (25-Jul-21, 1:29 pm)
சேர்த்தது : தமிழ் வழியன்
Tanglish : varalaaru padai
பார்வை : 633

மேலே