பதபதைக்குது நெஞ்சமே

பதபதைக்குது நெஞ்சமே
பதபதைக்குது நெஞ்சமே
என்னாகும் என் எண்ணமே ...

நாளைய கனவாய் வந்தாய்
இன்று
நேற்று நடந்தது என்னவென்று
மறந்தேன் ...

என்னோடு நீ இருந்தால்
வாழ்வில் மகிழ்ச்சியே ...
சாயுற பொழுதில் அலையாய்
நினைவுகள் மிச்சமே...

நீ எங்கேயென்று
நானும் தேடி
என் கண்ணிரண்டும்
சோர்வாய் ஆனதே ...

ஏற்க மறுக்கிறேன்
நானேயென்
தனிப்பட்ட முடிவை
என்ன ஆனதோ ...

தேன்தமிழ் கற்று முன்மொழிகிறேன்
காதல் கை கூடுமோ ...

வழக்கம்போல் வாழ்க்கை
இல்லையே
மனசுவிட்டு பேசிடவும்
தோணவில்லையே ....

எழுதியவர் : BARATHRAJ M (25-Jul-21, 3:46 pm)
சேர்த்தது : BARATHRAJ M
பார்வை : 59

மேலே