கிறுக்குத் தோழி

கம்பனால்
கவிவடிக்கப்படாத
ஒரு கவிதை
நீ

கவிவடிக்க காத்திருந்து
கரம் கோர்க்கும்
தோழன்
நான்

நிழல் உரு
நீ
உயிர் தரும்
ஒளி
நான்

உவமை வடிவம்
நீ
ஒலி தரும்
மொழி
நான்

அழகு வடிவம்
நீ
வர்ணம் பூசும்
தூரிகை
நான்

நீயின்றி நானும்
நாணின்றி வில்லும்
இயங்குதல்
எப்படி...?

இடை இன்றி
இணைவேன்
இன்னிசை கூறிடு
இப்படி...

ஆண்மை அளித்தது
ஆண்டவன் என்று
அறிவேன் அழகே
அனைத்தும் உணர்ந்தது
உன்னிடம்
உலகே

என் நினைவின் ரீங்காரம்
நிசப்த நொடியில்
நித்திரை கொள்வதை
நீ மட்டுமே அறிவாயா...?
காரணம்,
என் நினைவு சிறைச்சாலை
உன் நினைவென ஏற்க
மறுப்பாயா......?

அன்பு தோழியே
எப்படியடி நான்
உனக்கு புரியவைப்பேன்
நான்
புதைந்திருப்பது
உனக்குள் என்று.....

எழுதியவர் : தமிழ் வழியன் (25-Jul-21, 3:50 pm)
சேர்த்தது : தமிழ் வழியன்
பார்வை : 4871

மேலே