மனுசன் மனுசனா வாழ கற்றுக்கொள்ள வேண்டும்

மனிதனை மனிதன்
ஏமாற்றித் திரியும் காலமிது
மத்தவன் எப்போ விழுவான்
என்று காத்திருக்கும் உலகமிது

மானம் போனாலும்
மனசுல நினைத்ததை சாதிக்கத் துடிக்கும்
மனிதக் கூட்டமிது

அட
மனிதனை மனிதன் ஏமாற்ற
மல்லாக்கப் படுத்து யோசிக்கும் காலம் இது.

மனிதன் மனம் போன போக்கிலே நடக்க விரும்பும்
காலம் இது.
மலையாய் நம்பியவனை
மனசார ஏமாற்றி,
மன்னிப்பு கேட்கும் உலகம் இது.

மக்கள் சேவை மகேசன் சேவை என்றே கூறி,
மிச்சம் மீதியில்லாம;
மக்கள் சொத்தை சூறையாடுற கூட்டமிது.

மனிசன மனிசன் அடிச்சிப்பிடிங்கி
வாழ்கின்றகாலமிது.
அதட்டி உருட்டி மிரட்டி,
அடங்கவைக்கும் காலமிது.

மனிசன மனிசன் சுரண்டி சுரண்டித் தின்னுகின்ற
காலமிது.

சுத்தம் சுத்தம் என்றே சொல்லி ,
மனதில் அசுத்தத்தையும்,
அசிங்கத்தையும் நிரப்புகின்றன காலமிது.

மனிதனுக்கும் மிருகத்திற்கும் வித்தியாசம் இல்லாத காலமிது.
மக்கள் எல்லாம் மாக்களாய் மாறும் காலமிது.
மனிசன மனிசன் அசிங்கப்படுத்தியே, ஆணவத்துடன் வாழும் உலகமிது.

அடங்காமல்,
ஆயிரம் பொய்களைச் சொல்லி,
அத்தனையையும் தனக்கே
எடுத்துச் செல்ல தவிக்கும் உலகமிது.

மனிசன மனுசன் பொலம்பவிட்டே
பொல்லாதது செய்யும் போக்கிரி உலகமிது.

பொழுது விடிந்தவுடன் யார் பொழப்ப கெடுக்கலாம்
என்றே போட்டி போட்டே கணக்கு போடும் உலகமிது.

மனிசன மனுசன் ஏச்சி பொழச்சி,
ஏப்பம் விடும் உலகமிது

எல்லாம் எல்லாம் எனக்கேத்தெரியும் என்று
ஏகபோகமாய் இருக்கவிரும்பும் உலகமிது.

ஆணுக்கு பெண்ணு சமமென்றே பேசிப் பேசியே;
ஆணும், பெண்ணை
அசிங்கப்படுத்தும் காலமிது .

அடக்குமுறை அநியாயம்
அக்கரமம் என்று அத்தனையையும் செய்யுதுவிட்டு,
ஆண்மீகத்தேடலில் ஐக்கியமாகும் காலமிது

ஆசை ஆசையா வந்து அணைக்கத்துடிக்கும் குழந்தைகளுக்கும்,
அப்பாய்ன்மென்ட் ஒதுக்கும் காலமிது.

அசிங்கத்தை அருவருப்பை அமைதியாக கைபேசியில்
கமுக்கமாக பார்க்கும் உலகமிது.
வயது மீறி செயல்படும் காலமிது.

அண்டை வீட்டான் ஒட்டிக்கொண்டுவிடுவானோ
என்றே பயந்து
எட்டிவாழும் உலகமிது.

உறவினர் கூடினால் உரசல் வரும் என்றே
ஒத்துப்போகாமல் ஒதுங்கி வாழ விரும்பும்
உலகம் இது.

பசி பட்டிணி என்று பாமரன் கேட்டாலும்
பாராமுகமாய் போகும் உலகம் இது.

பல்லை இளித்து பாசாங்குகாட்டி
பதுங்கிவாழும் கூட்டமிது.
மெத்தப்படிப்பு படித்தாலும்
நாகரீகமா நடக்காத கூட்டமிது.

கூட்டமாக வந்தாலும்
பொது சொத்தை கொள்ளையடிக்கத்திட்டம் தீட்டும்
கூட்டமிது.

ஒற்றுமையாய் வாழ்வோம் என்றால்,
ஒருமையில் தாண்டி வாழத் தவிக்கும் கூட்டமிது.

உங்கவீடு பத்தினாலும் எங்கவீட்டுக்கு வரக்கூடாதுன்னு
தன் வீட்டை மூடும் கூட்டமிது.

பட்டினி பட்டினி என்றே பாமரனை பகடை காயாக வைத்து வாழும்;
பைத்தியக்கார உலகமிது

பெருமை பெருமை என்று பேசியே, பாராட்டைத்தேடும் உலகமிது.

ஓடி ஓடியே பணத்துக்கு அடிமையாகி
பாசத்தை விலை பேசும் மனுசங்க வாழும் உலகமிது.

பாலாப்போனவன் விலங்குகள் பறவைகளையும், விட்டுவைக்காம இயற்கையையும் வேட்டையாடத் துடிக்கும் வேஷக்கார உலகமிது.

வெளியில் போய் வேண்டியதை தின்னுபுட்டு
மீதி கிடக்கும் உணவுப்பொருளை வீசி எறிந்துவிட்டு,
வேறு எதையோ வீதியில,
பொறுக்க துவங்கும்
பொல்லாத மனுசங்க வாழும் உலகமிது.

பாழாப்போன சாதிசட்டைக்குள்ள பதுங்கிக்கொண்டு
பால்டிக்ஸ் செய்யவே பழகிப்போன மனுசனுங்க
வாழும் உலகமிது.

நாகரீக உடையில் நாத்தம் பிடிச்ச உடலை மறைக்க
வாசனைத் திரவியத்தை
பூசி உண்மையை மறைக்கும் உலகமிது.

ஒடுங்கி அடங்கி கிடக்கும் போது
ஓலம் இடும் மனுசக் கூட்டமிது.

ஒருவனை ஒருவன் அடித்தே வாழத் தவிக்கும்
அநாதைக் கூட்டமிது;
அட அநாதைக் கூட்டமிது.

அர்த்த மில்லாத வாழ்க்கைத் தேடலில்
வயதையும் வாழ்வையும் அழிக்கத் துடிக்கும் கூட்டமிது.

வந்த உலகை வெந்து போக வைத்து
நாகரீக ஓட்டத்தில் நாசூக்கா வாழத்தவிக்கும்
முட்டாள் கூட்டமிது.

வழக்கு விவகாரத்து
என்று வாய்கூசாமல் பேசி
வாழ்க்கையை சீரழித்த கூட்டமிது.

பெத்த தாயையும் பேனிக்காத்த தகப்பனையே வித்த கூட்டமிது

பாலியல் உறவு ஆசையில்
பாசமுள்ள குழந்தையையே
அசிங்கப்படுத்திய
பாளாப்போன மிருகங்கள் வாழும் கூட்டமிது.

பழகிடும் பெண்ணினத்தை கொச்சைப்படுத்தியே
பாசத்திற்கு வேசம் போட்ட கூட்டமிது.

பெண்ணியம் பெண்ணியம்
என்றே பெருமை பேசி பெண்மையைத் தொலைத்து
பேசன்குள்ளே புகுந்த கூட்டமிது.

ரேசன் கடையில் வாங்கி வந்தாலும்
ரோஷம் இல்லாம ரோட்டச் சுற்றிவந்து வீதியிலே
வேண்டியதைத் தின்னும் கூட்டமிது.

மூட்டை மூட்டையா பாவத்தைச் செய்து விட்டு;
முடிச்சி போட்டு முடியையும் சாமிக்கு கொடுத்து
புண்ணியம் தேடும் கூட்டமிது.

பகவான் தரிசனத்தையே பாலாப்போன பணத்தக்கொடுத்து பார்க்கும் கூட்டமிது.

பதுக்கல் கள்ளத்தனம் திருட்டு ஏமாற்று
பித்தலாட்டம் மொல்லமாரித்தனம்
கொலை கொள்ளை கடத்தல் எல்லாம் செய்ய
பழகிப்போன கூட்டமிது.

பட்டணம் வந்தே
படோடப வாழ்க்கை வாழலாம் என்று , பேராசைபிடித்து
சீரழிந்த கூட்டமிது

பணம் பணம் என்றே
பணத்தைத் தேடி பிணமாகக் கிடக்கும் மனிதக் கூட்டமிது.

பலரை சீரழித்து வெளிநாட்டுக்கு ஓடிய பணக்கார கூட்டமும் உண்டு.
அட மனுசன மனுசன் ஏமாற்றும் உலகமிது

மனுசனை மனுசன் நம்பினாலே
நன்மை பிறக்குமுங்க;
நல்லது கெட்டதை எடுத்துச் சொல்ல
நாலு பெரியவங்க வீட்டிலே வேணுமுங்க;
நாம
வேட்டையாடும் விலங்குள் இல்லையுங்க;
வேதனைப்படுபவனை வேடிக்கைப் பார்த்து
போகாமல்,
வேண்டிய உதவி செய்யனுமுங்க;
வேண்டாத நாகரீகத்தை
தீண்டாமல் இருந்தாலே,
திரும்ப நம்ப கலாச்சாரம் வளருமுங்க;

தீயச்செயல்கள் தீயிலும் கொடியதுங்க
திருந்தி வாழ வழிகாட்டல் வேணுமுங்க;
இளைஞர்கள் இந்நாட்டை உருவாக்கும் கலைஞருங்க;
இயலாமை இல்லாமையை ஒழிக்க,
இளயசமுதாயம் வளர இடம் கொடுக்கனுமுங்க;

மனுசன மனுசன் ஏமாற்றும் பிழைப்பு
நிற்கனுமுங்க;
மக்களாட்சி மலர்ந்து,
மண்ணை நம்பி வாழும் உழவன்,
வளம் பெறவேண்டுமுங்க.
விஞ்ஞானம் வளர்ந்து விபரீதம்
தராமல் இருக்கனுமுங்க

மெய்ஞானம் நம் மேனி போன்றதுங்க;
அதை நாம் பேணிக்காக்க வேணுமுங்க
இயற்கையை அழித்து விட்டால்,
இருக்க புவியில் இடம் இல்லைங்க.
இதைப் புரிந்தே நீனும் ,
பசி பட்டினியா நீக்கி
மனுசன் மனுசனா வாழ
கற்றுக்கொள்ள வேண்டும்.

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (27-Jul-21, 10:14 pm)
பார்வை : 120

மேலே