கனவு காணுங்கள்

"கனவு காணுங்கள்"
சொன்ன...கலாம் அவர்கள் ...
"பிறர் போல் மாறுவதற்கு"
என்று சொல்லவில்லை.

"கனவு காணுங்கள்"
எனச் சொன்னவர் ...
"முயற்சியின்றி" என்று
சொல்லவில்லை.

"கனவு காணுங்கள்"
என்று போகுமிடமெல்லாம்
சொன்னவர் ...
"கனவை மட்டும் காணுங்கள்"...
எனச் சொல்லவில்லை.

"கனவு காணுங்கள்"
என்று சொல்லிவிட்டு
"பகலிலும்"...என்று
சேர்க்கவில்லை.

"கனவு காணுங்கள்"
என்ற போது ...
"கனவுகள் பலிப்பதில்லை"
என்று சொன்னதில்லை.

"கனவு காணுங்கள்"
என்று சொல்லிவிட்டு
"எத்தனை முறை" என்று
எண்ணிட விட்டதில்லை.

"கனவு காணுங்கள்"
என்று சொன்னவர்
அதில் தேசமும்
பயன்பெறட்டும்...என
சொல்லாமல் விட்டதில்லை.

காண்பது
கனவென்றாலும்...
அதிலும் வெல்வது
நீயாக இருக்கட்டும்.

மரு.ப. ஆதம் சேக் அலி

எழுதியவர் : PASALI (27-Jul-21, 11:57 am)
சேர்த்தது : PASALI
Tanglish : kanavu kaanunkal
பார்வை : 111

மேலே