வருவாய் துறையும் வரித்துறைகளும்

செலவுகள் மட்டுமே செய்யும் வருவாய் துறை
இவர்களைத் தேடி மக்களே செல்ல வேண்டும்
இடர் காலத்திலே இவர்களுக்கு வேலை
மண்ணை மலையை ஆற்றை காக்கவும்
நிலமெடுத்தல் உரிமை மாற்றல் நிலத்துக்கென
எல்லையை வரையறுத்தலே தலையாய பணி
நிலவரி வீட்டு வரி ஏரி குத்தகை என்றதாய்
வரியை வசூலிக்கும் பணிகள் எனவும் உண்டு

நேரடி மற்றும் மறைமுகவரி என வசூலிக்கவே
வருமான வரிக்கும் வணிக வரிக்கும் துறைகள் உண்டு
பணமும் நகையும் சொத்துக்களை கணக்கெடுத்து
அதற்காக உரிய வரியை தண்டமுடன் வசூலிக்கும்
துறை மத்திய அரசின் வருமான வரித் துறை
விவசாயம் சிறு குறு தொழில் பெருந்தொழில்
எரிபொருளகம் பொழுதுபோக்ககம் உணவகம்
மதுக்கூடம் மருந்தகம் மண்டபங்கள் வாகனங்கள்

சலவை நிலையம் பாத்திரக் கடை தணிக்கைச் சாவடி
சவரக் கடை சாயப்பட்டறை அரசு கட்டட கட்டுமானம்
எனப் பலவகையில் நேடியாய் மக்களுடன்
தொடர்புடைய துறைகளை கண்காணித்து விலையை
ஒழுங்குப்படுத்தி வரிவசூலித்து தொன்னூறு
விழுக்காட்டு வருமானத்தை அரசுக்கு அளிக்கும்
வணிகவரித்துறை அரசால் விதிக்கப்படும் பலவகை
வரிகளையும் வரிச்சலுகையையும் வரிவிலக்கையும்

வரைமுறையுள் வணிக நிறுவனங்கள் செய்கின்றதை
கண்காணித்து தவறுகள் நடக்காமலும்
தடங்கள் இல்லாமலும் காக்க வேண்டியது
இத்துறையின் பொறுப்பு சட்டமும் சமூக உணர்வும்
மனிதாபிமானத்துடனும் கள்ளர்கள் கலப்பிடர்கள்
கொள்ளையர்கள் திருடர்கள் பெருமுதலாளிகள்
மந்திரிகள் அதிகாரிகள் என யாவருடன் இணக்கமாய்
பணியாற்றி வாழ வேண்டிய துறைக்கு
எங்கும் செல்ல எந்த வாகன வசதியும் இல்லை

சிறு தவறுக்கும் பெரியத் தண்டனையும்
இரு ஆண்டுக்கு ஒருமுறை கட்டாய இடமாற்றமும்
கேட்கும் ஊர்களுக்கு இடைக்கா நிலையில்
குடும்பம் குழந்தைகள் வீடு வாசல்கள் என
எல்லாவற்றையும் அரவணைக்க இயலா நிலையில்
ஊழியம் செய்யும் துறையாம் வணிகவரிகள்
என்றாலும் அரசு உத்தியோகம் அமைதியைத் தரும்
என்ற வெளியோர்களின் சொல் வேதமே.
----- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (27-Jul-21, 9:12 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 73

மேலே