காதல்மது சிந்தும்

இருவிழியில் துள்ளும்
திராட்சைகள்
ஒரு பார்வை வீச்சில்
காதல்மது சிந்தும்
கருங்குழல்
காற்றிலாடும் போது
நெருடுது உன்நேசத் தென்றல்
நெஞ்சில் !
----------------------------------------------------------------------------------------------------------------

வெண்பாவாய் ....

இருவிழி யில்துள்ளி டும்திராட் சையின்
ஒருபார்வை வீச்சில்கா தல்மது சிந்தும்
கருங்குழல் காற்றிலாடி டும்போது நெஞ்சில்
நெருடுதேஉன் நேசத்தென் றல் !

எழுதியவர் : கவின் சாரலன் (28-Jul-21, 9:52 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 75

மேலே