இன்பமுடன் வாழ்ந்திடுக
பூப்பெய்திய மங்கையின்
பூட்டப் படாத மனதில்
தடையின்றி நுழைந்து
துளிர்த்து தழைத்திடும்
மலர்ந்து மணம் வீசும்
உண்மை காதல் !
விழிகள் உரையாடும்
ஒலியற்ற மொழியில் !
இதயங்கள் உறவாடும்
இரவு பகல் பாராது !
உள்ளங்கள் உலாவரும்
உருவமற்ற வடிவில் !
தூங்காத மனத்தால்
தூக்கம் மறக்கும் !
பருவத்தின் தாகம்
பார்வையில் தெரியும் !
காதலின் தாக்கம்
கற்பனைகள் கூடும் !
இனித்திடும் காதலால்
இணையும் இதயங்கள்
இல்வாழ்வில் அடிப்பதித்து
இறுதிவரை பிணக்கின்றி
இல்லறத்தில் இலக்குடன்
இன்பமுடன் வாழ்ந்திடுக !
பழனி குமார்