குடி குடியை உயர்த்துகிறது...

*"ஃபார் "க்கு உள்ளே நல்ல நாடு...என்ற தலைப்பில் கவிதை ரசிகன் எழுதிய சிறப்பான கவிதை...*



பாருக்குள்ளே
நல்ல நாடு
எங்கள் பாரத நாடு என்றான் பாரதி....
ஆனால்
இன்றோ
'ஃபார்' க்கு உள்ளே
நல்ல நாடு
எங்கள் பாரதநாடு என்று
பாடும் நிலை
உருவாகியுள்ளது...!

கதாநாயகன்
எது செய்தாலும்
சரியாக இருக்கும்
என்பது நியதி ....
கதாநாயகன்
குடிப்பது போல் காட்டுவதால் குடிப்பது தப்பில்லை என்று சொல்லாமல் சொல்கிறார்கள்...!

நடிகர்களின்
நகல் ஆகவே வாழும்
இன்றைய ரசிகர்கள்
நிலை என்னாகும்?

பீர்
குடித்தால் தப்பில்லை....
நிறைய குடித்தால்தான்
தப்பு கொஞ்சம்
குடித்தால் தப்பு இல்லை என்ற எண்ணத்தை
இன்றைய திரைப்படங்கள் இளைஞர்கள் மனதில்
வேரூன்றி வளர
காரணமாக இருந்து வருகிறது...

மது குடிக்கும் காட்சிகள்
வரும்போதெல்லாம்
"மது
நாட்டுக்கும்
வீட்டுக்கும் கேடு" என்று
போடத் தெரிந்தவர்களுக்கு....
குடிக்கின்ற காட்சி
ரசிகர்களின்
"வாழ்க்கைக்குக் கேடு" என்பது
எப்படி தெரியாமல் போனதோ.?
ஓ.....!
ஊருக்கு உபதேசமோ...?

அப்பனுக்கு
மகன் ஊற்றிக்கொடுப்பது...
மகனுக்கு
அப்பன் ஊற்றிக்கொடுப்பது....
கணவனுக்கு
மனைவி ஊற்றிக்கொடுப்பது நண்பனுக்கு
நண்பனே ஊற்றிக் கொடுப்பது இதைத்தான்
இவர்கள்
கதை என்று சொல்லிக்கொண்டு
கலாச்சாரத்தை சீரழிக்கின்றனர்...

கணவன்
மனைவியை
கூட்டிக் கொடுப்பதைக் கூட
காட்டிவிட்டார்கள்....
இன்னும்
கணவன்
மனைவிக்கு ஊத்தி கொடுப்பதைத்தான்
காட்டவில்லை.....
அதுவரை
சந்தோசம் தான்.....

துன்பமாய் இருந்தாலும்
இன்பமாய் இருநதாலும்
குடிக்கும்
தரம் கெட்ட பழக்கங்களை
இளைய சமுதாயத்திடம்
பரப்பியது
சுயநலம் கொண்ட
திரைப்படங்கள் தான்...!

இளைய சமுதாயத்தை
குறிவைத்தேத !
இந்த காட்சிகள்
உருவாக்கப்படுகிறது.....!

ஒரு சிலர் குடி வாழ
இங்கு பலர்
குடித்தே வாழ வேண்டியிருக்கிறது...!

நடிகனுக்கு என்றால்
உயிரைக் கூட கொடுக்கும்
ரசிகர்களுக்குத்தான்
நடிகர்கள்
இப்படிப்பட்ட
கெட்ட பழக்க வழக்கங்களை
எல்லாம்
கற்றுத் தருகிறார்கள் .....!

திரையில்
நடிகன் செய்வதையெல்லாம்
தரையில்
ரசிகர்கள் செய்வதே
பொழப்பான பிறகு....!
இவர்களுக்கு
குடிப்பது மட்டும்
என்ன
கெட்ட பழக்கமாகிவிடுமா...?

ரசிகர்களை
குடிக்கும் பழக்கத்தை
உண்டாக்கித் தான்
சிலர் குடி
உயர வேண்டும் என்றால்
அவர்கள் குடி
குட்டி சுவராய் போகட்டும்
தீமூட்டி வேகட்டும்.....!

இவர்கள்
கலையை
வளர்ப்பதாக
சொல்லிக்கொண்டு.... !
நாட்டில்
வேண்டாத களையைத்தான்
வளர்த்துக்
கொண்டிருக்கிறார்கள்...!

நடிகர்களே !
ரசிகர்கள் மீது
உங்களுக்கு
உண்மையிலேயே
அன்பும்
அக்கறையும் இருந்தால்
குடிக்கும் காட்சியில்
நடிக்க மாட்டோம் என்று
உறுதிமொழி எடுங்கள்....!

குடிக்கும் காட்சி உள்ள
திரைப்படங்கள்
வெளியிட முடியாது என்று
சட்டம் இற்றுவோம்...
திரைப்படக் கலையை
புனிதமாக மாற்றுவோம்...

நடிகர்களே!
நீங்கள்
உண்ணும் உணவின்
ஒவ்வொரு அரிசியிலும்
ரசிகர்களின் பெயர்தான்
எழுதி இருக்கிறது என்பதை
ஒரு நாளும்
மறந்து விடாதீர்கள்......!

#கவிதை-ரசிகன்

எழுதியவர் : கவிதை ரசிகன் (29-Jul-21, 8:51 pm)
பார்வை : 46

மேலே