இறைவன் இறைச்சி
இறைச்சிக்கும் இறைவனுக்கும்
ஒரு உறவு சொல்லிலும் பொருளிலும் உண்டு
ஆதலால்
இறைச்சி உண்டால் இறைவன் கிட்டுவான்
இறையருளும் கிட்டும் என்றான்
அசைவன் சைவனிடம் !
உணவு சைவமோ அசைவமோ
உண்டால் வெளிக்கு வரும்
உள்ளத்தின் உண்மை அன்பினால் பக்குவத்தால்
இறையருள் கிட்டும் ஞானம் வரும்
இறைவன் கிட்டுவான்
வெறும் உணவினால் அல்ல
என்று சொல்லிச் சென்றான்
போகிற போக்கில் ஒரு மனிதன்
சைவனோ அசைவனோ !