அருந்தாதே
அருந்தாதே
அருந்தத் தெரிந்த மனமே
உனக்கு திருந்தத் தெரியாதா
திருந்த மறந்த மனமே
உனக்கு வருந்தத் தெரியாதா
மனமே வருந்தத் தெரியாதா
உறவை தெரிக்கத்துறந்த மனமே
உனக்கு அணைக்கத் தெரியாதா
நிறக்க வைக்க இயலா மனமே
உனக்கு சிறக்கத் தெரியாதா
மனமே வழிவகுக்க தெரியாதா
வரம்பு மீறவுன் நரம்பு தளராதா
நரம்பு தளரும் போது மனமே
தேகம் இயங்க மறுக்காதா
சேதி தெரியாதா நாதியற்று
மனமே தெருவில் கிடக்காதா
குடும்ப தரங்கள் குறையாதா
அரசுக்கு வருமானம் குறையும்
இழப்புகள் இரு தரப்பாகிறதே
மனமே உனக்கு தெரியாதா
உணர்ந்து மாறிட இயலாதா
யாருக்கு? லாபம் தெரியாதா
வந்தோம் வாழ்ந்தோம் சரிதான்
நினைவு கூறும் முத்திரையை
பதிக்க மறந்து போகிறோமே
மனமே மறைந்து போகிறோமே
□
ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்.