வானமே எல்லை

வானமே எல்லை;
வாழ்க்கையில் இனி என்ன தொல்லை;
யாக்கை நிறந்தரம் இல்லை;
வாழ்க்கை யாருக்கும் சொந்தமில்லை;
கடல் காயப்போவதில்லை;
அலைகள் ஓயப்போவதில்லை;
காற்று நிற்கப்போவதும் இல்லை.

நேற்று என்பது இன்று இல்லை;
இன்று என்பது நாளை இல்லை;
நாளை என்பது நிரந்தரம் இல்லை;

வாழ நினைப்பனுக்கு வானமே எல்லை;
வீழ நினைப்பனுக்கு வாழ்க்கையே தொல்லை;.

வறுமை வறுமை என்று வீற்றிந்தால்,
வாழ்க்கை இல்லை;
வாலிபத்தை விட்டால்,
உனக்கில்லை உய்வு.

வாய்ப்பில்லை என்று வழக்காடாதே;
திறமையைத்தேடு;
திறம்பட செயல்படு;
திண்ணாடுவதை விடு;
திட்டமிடு;
தெளிவாய் இரு;
திறந்திடும் வாய்ப்பு.

தொடுவேன் என்ற வெறி இருந்தால்,
தொடும் தூரம் தூரத்தில் இல்லை;
தொல்லை தொல்லை தொல்லை என்று
இருந்தால்;
தொடும் தூரமும் தொலைதூரம் தான்.

விழுந்து விட்டோம் என்று நினைக்காதே;
விழும் பருதியாய் இரு;
எழும் பருதிதான்.

எழ நினைப்பவனுக்கு,
எழுச்சியே முல்லை;
வீழ்வேன் என்று வீற்று இருக்காதே;
வாழ்வேன் என்று வா!

விடிவு உண்டு என்று,
வெற்றியை விரட்டி ஓடு;
விரக்தி வேண்டாம்.

விதியின் விளையாட்டு என்று
வீற்று இருக்காதே.

விழுவதற்கு பிறக்கவில்லை நாம்;
வியர்வையைச் சிந்து;
விடைகான ஓடு.
தேடலில் வேண்டும் தெளிவு;
திமிராய் போனால் வரும் கேடு.

விடுப்பு எடுப்பதில்லை பூமி;
வெறுத்து நிற்பதில்லை பூமி;
பகைக்கவில்லை இந்த பூமி;
படைப்பில் இல்லை வேறுபாடு;
பகுத்தறிவு இல்லை என்றால் பெரும்கேடு.

பிரச்சனை பிரச்சனை பிரச்சனை
என்று பிசு பிசுக்காதே;
பசித்தாலும் அழும் குழந்தைதான் பால் குடிக்கும்.

அலட்சியம் வேண்டாம்;
பயணத்தை இலட்சிய பாதையாக்கு;
தொடுவேன் என்ற வெறி இருந்தால்;
தொடும் தூரம் தூரத்தில் இல்லை;
எண்ணத்தை ஏணியாக்கு;
உன் செயலை பாலமாக்கு;
நம்பிக்கையை பலமாக்கு.

எல்லை இல்லா விண்ணில்,
மின்னி சிதறிக்கிடக்கும் விண்மீன்கள்.
வாய்ப்பு தூரத்தில் தான் இருக்கும்,
துரத்தித்தான் போகவேண்டும்.

துடுப்பாய் நம்பிக்கையிருக்க,
துயரைத் துடைத்துவிடு.

சரிந்து கிடக்க சருகு அல்ல நீ!
சிரித்தும் சிந்தித்தும் வாழும் மனிதன் நீ;
சிறகு முளைத்த பறவையாய் இரு;
சவாலை ஏற்று வா;
சரித்திரம் படைக்க வா;

ஓடும் வரை பயம் விரட்டும்;
ஒடுங்கிப்போகும் வரை உன்னை விரட்டும்;
நடுங்கும் வரை குளிர் அண்டும்;
அடங்கிப்போகும் வரை ஆட்டம் காட்டும்;
ஒருமுறை உற்றுப்பார்,
ஓட்டம் எடுக்கும் உன்பயமும்,
ஆட்டம் எடுக்கும் அடிமைத்தனமும்,
ஊட்டம் எடுக்கும் உனக்கும்,
உனக்குள் வெக்கை பிறக்கும்.

விரக்தியில் வீட்டில் அமர்ந்திருந்தால்,
வாய்ப்பு வீட்டுக் கதவைத்தட்டாது,
இருட்டிற்கும் விளக்கை வைத்தான் இறைவன்;
எடுக்கும் செயல்களை முடித்துவிடு;
ஏய்த்து பிழைப்பவனை எட்டியே உதைத்திடு;
அலுத்துப்போகாதே;
அன்புடன் பழகு;
துன்பம் வரும் வேலையில்,
துவண்டுபோகாதே;

விழிப்பாய் இரு;
விழாமல் இரு;
உழைப்பால் உயரு.
உயர உயர பொருப்பாய் இரு.

வானமது தூரம் இல்லை;
துரத்தும் மேகத்திற்கு எல்லையில்லை;
தொடுவானம் தொடராமல் இருப்பதில்லை;
தொல்லை உன்னைவிடாது இருப்பதில்லை.
வானம் உன் பிடியில்;
வையகம் உன் உள்ளங்கையில்
வாழ்ந்து காட்டு.

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (1-Aug-21, 9:10 pm)
Tanglish : vaaname ellai
பார்வை : 110

மேலே