சமம்

உணவு வடித்த பாத்திரம்
இரவில் காலியாய் கிடக்கிறது
தாயின் வயிறு

நன்மையும், தீமையும்
தெளிவாய் ஜொலிக்கிறது
பள்ளியருகே மதுக்கடை

சமமாய் நிகழ்கிறது
ஆக்கலும்,அழித்தலும்
காடுகள் அழிப்பு

அட்சரேகை
இரண்டாக பிரிக்கிறது
அவளின்( குழந்தை )உதட்டை

மழைப்பஞ்சம்
ஒன்றெனக்காட்டியது
வயலையும்,வயிற்றையும்


அதிகாலைச்சூரியன்
தொலைவிலே நிற்க்கிறது
அதற்க்கும் மாதவிலக்கு

வெட்ட நினைத்தாலும்
மீண்டும் முளைக்கிறது
ஆணவக்கொலை

இரவின் நிழல்
காற்றின் கைரேகை
ஏழைக்கனவு

மாடி வீட்டை கூரையோடு
சண்டையின்றி இனைக்கிறது
சிலந்திவலை

யாரெனத் தெரியாமல்
சமன்செய்கிறது
சுடுகாட்டில் சம்மட்டி

எழுதியவர் : தமிழ் வழியன் (1-Aug-21, 9:58 pm)
சேர்த்தது : தமிழ் வழியன்
Tanglish : samam
பார்வை : 44

மேலே