கண்ணாமூச்சி

"அவள் சிற்பம் என வந்து நின்றாள்,
சொற்பமென சிரித்து கொன்றாள்,
விழியில் காதலலை சிறிது கற்போம் என்று பார்த்தான். இடையில்
'இத்தனை பொருளுக்கே விற்போம்'! என்றனர் பெற்றோர்.

'அற்பமென' பார்த்தாள் அவனை,
மிதித்தது 'சர்ப்பம்' என
விலக்கினால் தன்னை,
'மறுப்போம்' என பார்த்தான் பின்னே,
தீயில் வறுப்போம் என சொல்லாமல் சொன்னாள் 'அன்னை'!

விழித்தான் அவன்,
கொதித்தாள் இவள்.

'பூத்த போது' பார்த்து ரசித்த ராசா,
'காய்த்த போது' மாய்ந்து
போன நேசா,
'கனிந்தபோது' தணிந்து
போனதென்ன லேசா ?
துணிந்து சொல்
காரணம் 'காசா ?'

பணிந்து போக நம்
'காதல்' என்ன தூசா ?
தெளிந்து வந்தால் நீ
அணிந்து கொள்ளவே
காத்திருக்கு இன்னும்
இந்த 'ரோசா'!

விழியால் அவள் உரைக்க,
இயலாமையால் இவன் தவிக்க,

இந்த காதல் என்ன கண்ணாமூச்சி
ஆட்டமா ?
அதன் வெற்றி தோல்வியை
நிர்ணயிப்பது பணத்தோட்டமா ?

என்ன நடக்கும் ? எது ஜெயிக்கும் ?

மனமா? பணமா ?

மனம் ஜெயித்தால். உறவுகளின் இழப்பு !
பணம் தோற்றால் காதலுக்கு மறுபிறப்பு !

---------

எழுதியவர் : (2-Aug-21, 7:14 pm)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : kannamoochi
பார்வை : 104

மேலே