ஏழை வீட்டில்....

*✍️கவிதை ரசிகன்* *_படைப்பு_*


நெல்
வரப்பை மறைத்தாலும்
ஏழை வீட்டில்
வறுமை மறையவில்லை ....

வான் மழை
பொழிந்தாலும்
ஏழை வாழ்க்கையில்
மகிழ்ச்சி செழிக்கவில்லை...

மாடி வீடு
விண்ணைத் தொட்டாலும்
ஏழைக்கு
மரத்தடியில்தான் வீடு.....

ஆயிரம் துணிக்கடை
வந்தாலும்
ஏழைக்கு
அரை நிர்வாணம் தான் ஆடை....

முதலாளி
பெருகினாலும்
ஏழைக்கு
கூலி
அதிகரிக்கவில்லை....

கட்சிகள்
கூட்டு சேர்ந்தாலும்
ஏழை உடையில்
ஒட்டு சேர்வது நிற்கவில்லை.....

குறிஞ்சிப்பூ மலர்ந்தாலும்
குடிசைக்குள்
மகிழ்ச்சி எப்போது
பூக்குமோ...?

*கவிதை ரசிகன்*

நன்றி!

எழுதியவர் : கவிதை ரசிகன் (2-Aug-21, 8:35 pm)
Tanglish : aezhai veettil
பார்வை : 68

மேலே