தனிமை அழகியல்
அமாவாசையில்
நிலவோடு நான்
அருகில் நீ!
உன் மூச்சுக்காற்றின்
வெப்பம்
ஆசைத்தீயை மூட்ட
ஒளிரும் உன் உதடுகள்
உயிர்பருகி
மெல்ல சிரிக்க!
ஒட்டிக்கொண்ட நாணம்
உயிர்வரை
காதல் பாய்ச்ச!
நீளாதா இந்த நொடி
மனதோடு
ஆசை பிறக்க!
எட்டிப்பார்த்த விழிநீர்
சொன்னது
தனிமை அழகியல்!