கிஸ் அடி

எண்ணங்கள் பல கோடி அதில் 
உன் கலை வண்ணங்கள் சில கோடி
என் வார்த்தைகள் தடுமாறுதடி 
உன் அழகான கன்னத்தாலடி 

ஆயிரம் நிலவொளிபோலுள்ளதடி 
என்னை மயக்கும் உன் கண்ணொளி 
ரோசாப்பூவின் இதழடி
என்னை ஈர்க்கும் உன் உதட்டழகடி...

காற்றில் கலக்கும் உன் பேச்சொலி 
என்னைப்பாடவைக்கும் இசையடி 
நீ சிணுங்கும் சிரிப்போ 
சில்லறைச்சிதறலடி 

கார்மேகக்கூட்டம் போலுள்ளதடி.
உன் கருங்கூந்தலின்
தோகையழகடி. நான் 
மாலை சூடப்போகும் உன் கழுத்தோ 
நிறை குடச்செம்பின் கலையழகடி 

சுட்டெரிக்கும் சூரியனாய் நீ 
என்னை விட்டெறிந்து போனாயடி. 

கொட்டும் மழையிலும் உன் 
பாதம்பட்டயிடமெல்லாம் 
விட்டிடா நான் தொடர்ந்தேன் 
உன்னடி சேர்வதற்கு. 

உன்மனதை உருக்கி 
என்மனதைத் திருடிவிட்டு 
நீ மறைந்துபோன 
மாயம்தான் என்னடி. 

அன்பைப்பொழிந்து என்னை 
அரவணைக்கும் வேளைதனில் 
நீ என்னை அந்தரிக்கவிட்டுச் சென்றாய் 
நான் அலையவில்லை உனைத்தேடி. 

ஏற்றத்தாழ்வுதனைக் கொண்டு 
என்னைத்தவற விட்டுப்போனாயடி 
எரியவில்லை என்மனம் அது 
தினம் உருகியது உனக்காக. 

மரணிக்கும் மனிதனுள் 
மரத்துப்போன மானிடன் நான் 
நான் மரணித்தாலும் உன் 
நினைவுகள் மடியாது என் நெஞ்சில்...

நான் இறந்தாலும் இடுவதற்கு 
உன் இதயத்தில் இடமுண்டு 
இறுதிவரை காத்திருக்கும் அது 
என்றும் எனக்காக . 

உன் நடையின் இடையழகோ 
என்னை நிலைதடுமாற வைக்குதடி
மொத்தத்தில் உன் மேனியே மிகையழகடி 
அதுதான் என்னை கவியெழுத வைக்குதடி
நீ வந்து எனது இதழோடு
இதழ் சேர்த்து கிஸ் அடி...

எழுதியவர் : (3-Aug-21, 8:54 am)
சேர்த்தது : Manima
பார்வை : 45

மேலே