செல்லையா சார்
ராஜ கம்பீரம்
குருவோடு சேர்ந்தால்
அது செல்லையா ஆசிரியர்...
குளிர் தென்றல் தவழும்
நந்தவன மனசுக்குச்
சொந்தக்காரர் எங்கள்
தாவரவியல் ஆசிரியர்...
எப்போது இவரது வகுப்புகள்
ஆரம்பிக்கும் என எதிர்பார்க்க
வைக்கும் யுத்தி இவருடையது...
சிரத்தை எடுக்காமலேயே
சிரம் ஏறும் இவர் சொல்லிக்
கொடுக்கும் பாடங்கள்...
மியூகார் தாவரம்... ஒரு
மாடி வீட்டு ஏழை...
அப்போது நடந்த சினிமாவின்
தலைப்பைச் சொல்லி
பாடம் நடத்தியதில்
இன்றும் தலையில் நிற்கிறது...
கன்னத்தில் என்னடி காயம்னா
வண்ணக்கிளி செய்த மாயம்னு
தேர்வுகளில் பதில் சுருக்கமாய்
இருக்கணும் என்று சொன்னது
இன்றும் நினைவில் உள்ளது...
கடைய நல்லூர்...
கருப்பாநதி தண்ணீர் பாயும்
வயல் வயற்காடுகள்
தோப்புத் துரவுகள் வைத்து
மேலாண்மை செய்ததால்
தாவரவியல் பாடத்தில்
ஆசிரியர் அவர்களின்
ஆளுமை அதிகம்...
மாணவர்கள் மீது காட்டும்
கூடுதல் பரிவு இவரது
ஆசிரியப் பணியின்
அழகைக் கூட்டியது...
தாவரவியல் சொல்லிக்
கொடுத்ததாலோ என்னவோ
மிதிவண்டியில் பள்ளிக்கு வரும்
காட்சி உட்பட செல்லையா
ஆசிரியர் அவர்களின் நினைவுகள்
இன்னும் பசுமையாகவே உள்ளன...
அவர் ஆசிரியப் பணியின்
இலக்கணம்... செல்வந்தராய்
இருந்தும் இருக்காது
அவரிடம் தலைக்கனம்...
வையத்துள் வாழ்வாங்கு
வாழ்ந்தார்... இனி இவர்
வானுறையும் தெய்வத்துள்
வைக்கப் படுவார்...
இறைவனது திருவடிகளில் அவரது
ஆன்மா அமைதி கொள்ளட்டும்...
இதய அஞ்சலிகள்...
தந்தையை பிரிந்து வாடும்
வகுப்புத் தோழன்
சரவணனுக்கும் குடும்பத்தாருக்கும்
ஆழ்ந்த அனுதாபங்கள்...
🙏🙏🙏💐💐💐
அன்புடன்...
ஆர்.சுந்தரராஜன்.