ஒலிம்பிக் திருவிழா
ஒலிம்பிக் திருவிழா
வண்ண வண்ண
கொடிகளுடன் அணிவகுப்பு
விதம் விதமாய்
மனித முகங்கள்
வித்தியாசமாய் நிறங்கள்
கூட
பேரும் நாடும்
சொல்லி அறிமுகப்படுத்த
பொங்கி வரும்
சிரிப்ப்புடன் கையாட்டும்
வீரர்களும் வீராங்கனைகளும்
உதடு துடிக்க
இறுக கடித்து
உடல் தசைகள்
அதிர்ந்து
கால்கள் இரண்டும்
பாய்ச்சலுடன்
துள்ளி ஓட
கைகள் அந்தரத்தில்
சுழன்றாட
குபீரென தண்ணீரில்
பாய்ந்து விழுந்து
நீந்தி செல்லும்
அழகு
ஒற்றை கண்களை
சுருக்கி வைத்து
சுடுவதோ,வில்லை
விடுவதோ
கூட்டு முயற்சியாய்
கூடி உதைக்கும்
பந்து வலைக்குள்
சென்றபின் போடும்
ஆரவார கூச்சல்
எத்தனை எத்தனை
விளையாட்டுக்கள்..!
வெற்றியோ தோல்வியோ
ஆட்டம் முடிந்தவுடன்
எல்லாமோ மாறி
முகங்கள்
காட்டும் முல்லை
சிரிப்பு
அதுவரை வெற்றி
பெற போராடிய
அத்தனை பேரும்
கட்டி அணைத்து
கொண்டாடி
பிரிந்து சென்ற
பண்பு
மனித எண்ணங்கள்
அன்புக்கும் பாசத்துக்கும்
அடிமை
இந்த சக்தி
விளையாட்டுக்கு
உண்டு
நிருபித்து
காட்டியிருக்கும்
இந்த ஒலிம்பிக் திருவிழா

