கவிதை

படைக்கும் படைப்பாளியின்
செல்லக் குழந்தை!
தன்நிகரற்ற மனச்சுமை
தாங்கும் சுமைதாங்கி!
ஆழ்மனதின் மதிமயக்கும்
சிந்தனை செதுக்கள்!
அதீத கற்பனையின்
மொத்தத் தொகுப்பு!
மனதின் மற்றற்ற
அமைதிக்கு அருமருந்து!
மனம் மயங்கும்
மந்திரச் சொல்!

எழுதியவர் : கவி பாரதீ (3-Aug-21, 9:47 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : kavithai
பார்வை : 260

மேலே