கண்ணால் பேசும் காதல் பெண்ணே
பதுமை உருவாய் அமைந்த
என் அழகுப் பெண்ணே!
என் உயிர்க்கூட்டை
வசியம் செய்கிறாய்
உன் வசீகரப் பார்வையால்..!!
ஜாடை மொழி கண்ணால் பேசும்
என் காதல் பெண்ணே!
என்னை களவாடிச் செல்கிறாய்
உன் களவுப் பார்வையால்...!!
ஓசையறிந்து பாஷை சொல்லும்
என் இதயத்துப் பெண்ணே!
என் இதயமே சிக்கித் தவிக்கிறது
உன் பின்னால்..
நீ பார்க்கும் ஓரவிழிப்பார்வையால்..!!