நிலவும் கதிரவனும்

மாலை முத்தத்திற்கு ஏங்கி நிற்கிறேன்
உன் ப்ரகாசமான தோற்றம் என்மேல் படுவதற்கு
தேய்ந்து கொண்டே போகிறேன்
உனக்காக காத்திருக்கும் நாட்களில்
என் ஒளியின் ஒலியே...
நீ காட்டிய பாதையில்
வெளிச்சம் தோன்றியது
நீ கொடுத்த முத்தத்திற்கு
நட்சத்திரங்கள் பூத்தன
வெட்கத்துடன் பார்க்கிறேன் உன்னை
நான் தோன்றும் போது மறைகிறாயே
காதல் மலரும் இம்மாலை பொழுதில்
நாம் சேர்வது எப்போது...

எழுதியவர் : ஸ்ரீராம் (4-Aug-21, 6:27 pm)
பார்வை : 204

மேலே