வைர பக்தர்

கடவுள் இல்லை இல்லை என்று சொல்லித்
திரிபவரும் கடவுள் பக்தர்தான் இவர்கள்
இல்லை இல்லை கடவுள் இல்லை
என்று கூறும்போது அவன் நாமத்தையே
நினைத்திடும் 'வைர பக்தர்' நாத்தீகர் இவரே
என்றறிவாய் மனமே நீ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Aug-21, 2:08 pm)
பார்வை : 65

மேலே