நாம் இருவரே இறுதிவரை

ஆசையோடு வளர்த்தவர் எல்லாம்
ஆதரவும் காட்டவில்லை !
பாசத்தைக் கொட்டியும் பலனில்லை
வீதியில் நான் இன்று !
ஒட்டி உறவாடிய உறவுகளும்
ஒதுக்கிவிட்டனர் நேசமின்றி !
ஆறறிவு உள்ளோர் வரவில்லை
ஆறுதல் கூறிடவும் அருகில் !
ஐந்தறிவு படைத்த நீயன்றோ
நெருங்கி வந்தாய் என்னிடம் !
கைவிட்டதால் கலங்கினேன் ,
உன் கைப்பட்டதால் மகிழ்கிறேன் நான் !
நான் ஒருத்தியல்ல இன்று முதல் ,
நாம் இருவரே இறுதிவரை !
துடிக்குது உள்ளம்
கண்டதும் காட்சியை ,
வடிக்குது செந்நீர்
வெடித்த நெஞ்சம் !
இந்நிலை வேண்டாம்
எவருக்கும் எந்நாளும் !
கல்லான இதயங்கள்
கற்றிடுக மனிதத்தை !
பழனி குமார்